Tuesday, 30 April 2013

இயற்கை தெய்வம்



உங்கள் அம்மா உங்களிற்கு குடை தரவில்லையா 
என்று அனுதாபமாய் நான் உங்களை பார்க்கிறேன் 
கோழி குஞ்சுகள் சொன்னது பரிதாவம் கொல்லாதே
மழையில் நீராடுகிறோம் இயற்கை விரோதியல்ல 
எங்களுக்கு இயற்கை தெய்வம் உங்களுக்கு எடுபிடி
நாங்கள் இயற்கையை மதித்து ஒன்றி வாழ்கிறோம் 
நீங்கள் இயற்கையை மிதித்து மீறி வாழ்கிறீர்கள்  
மழையில் நனைந்தால்மருத்துவ செலவு உங்களுக்கு 
பரிதாபம் உங்கள் மீது தான் பார்த்து வீடு போ என்றன 

Monday, 29 April 2013

இல்லறம் நல்லறமாக


இல்லறம் நல்லறமாக 
இரு வெவ்வேறு மனிதர்கள் வித்தியாசமே 
வித்தியாசங்கள் இருக்கும் என்பதை புரிதல்
வேறுபாடுகளை விரும்பி வாழ்வதே காதல் 
இது தான் இனிய மண வாழ்வின் இரகசியம் 

Sunday, 28 April 2013

அநீதிக்கு நீதி

அநீதிக்கு நீதி 
கூண்டில் அடைபட்ட கிளி  வெளியே வந்தும் பறப்பதில்லை
இறக்கை இருப்பதையே மறந்து விட்டு  யோசியம் சொல்கிறது 
சமூதாயக் கூட்டில் அடைபட்ட விதவை பெண் மன நிலை கூட 
இளமை கனவுகள் இருந்தும் உணர்வுகள் சாகடித்து நீதி செய்கிறாள்

Saturday, 27 April 2013

நிகரற்ற அனுபவங்கள்



பெற்றவளுக்கு முதல் குழந்தை காணும் நொடிகள் 
இதயங்கள் இணைந்து துடித்த முதல் காதல் நிமிடங்கள் 
பள்ளி பருவ முதல் நண்பர்கள் நகர மறுக்கின்ற நாட்கள் 
இந்த தருணங்கள் வாழ்கையில் ஒரு முறை மட்டுமே 

Friday, 26 April 2013

வெறுத்தும் நிலைத்தவன் ..!!


வெறுத்தும் நிலைத்தவன் ..!!
இரவுகள் அழகாய்  விழிகள் உறங்காதவரை 
கனவுகள் தொடர்வது கண்கள் திறக்காதவரை 
ஒன்றில்லாமல் ஒன்றில்லை இருந்தும் நான் 
உன் நினைவில் நீ நேசித்தாலும் வெறுத்தாலும்




Thursday, 25 April 2013

மாற்றம்...!!



மனிதனின் மனது மழை நீர் போல 
கலங்க மற்ற கடவுளின் வரமாய் 
இயல்பாய் இயற்கையாய் இருந்தது 
மனித நவீன நாகரிகத்துள் விழுந்து 
இரண்டுமே விஷமாய் மாறும் வரை 

Wednesday, 24 April 2013

நினைத்திருக்கும் வரை



ஆலய மணி ஓசை காற்றில் கலந்து 
தெய்வீக ராகமாய் செவிகளில் விழுந்தது 
சேவலின் கூவலும் குயிலின் பாடலும் 
பறவைகளின் சத்தம் இரை தேட ஆயுத்தம் 
இறுதியாய் இருளை பிரிய மனம் இல்லமால் 
இருள் விலகி ஒளி இமைகள் தானாய் திறந்தன
நீண்ட நீலத் திரையை விலத்திக்கொண்டு 
சூரியன் சுறு சுறுப்பாய் வருவது தெரிகிறது
இனி இந்த ரம்மியமான இனிய  காலை  காட்ச்சி 
தாய் மண் பிரிந்தவற்கு நினைத்திருக்கும் வரை 

Tuesday, 23 April 2013

சுவாசிக்காமலே


பத்து நிமிடங்கள் நீருள் இருந்தால் மூச்சே நின்றுவிடும் 
பத்து மாதங்கள் மட்டும் எப்டி மூச்சில்லாமல் வாழ்ந்தேன் 
நீருள் பிறந்தும் சுவாசிக்காமல் வாழ்ந்ததால் தான்  
நீருள் சாம்பலாய் கரைகிறேன் சுவாசம் நின்றதும் 

Monday, 22 April 2013

கால நிலை மாற்றம்




கால நிலை மாற்றம்..!!
மழை அடிக்காமலே குடை பிடிக்கிறேன் 
வெய்யில் சூட்டிலும் அடுக்கடுக்காய் உடை 
கோடை குளிர்வதாய் உன் அணைப்பினுள் 
வெளியே குளிர் உள்ளே வெயில் இறுக்கத்தில்

Sunday, 21 April 2013

உறங்கும் உண்மை


நிஜங்கள் நம் கூடவே நிழலாய் தொடந்தும்  
மனதலவில் மது அருந்தாமலே போதையில் 
சிரிக்க கற்றுக்கொண்ட நாகரிக மிருகமாய் 
ஆறறிவால் அறிந்தும் ஏற்காத உண்மை 
மனித வாழ்கை அது நிலைப்பதில்லை 

Saturday, 20 April 2013

கவிதை போட்டிக்காக எழுதிய குறுங் கவிதைகள்...!!



கவிதை போட்டிக்காக எழுதிய குறுங் கவிதைகள்...!!
உங்களுக்கும் பிடிக்கும் வாசித்து பாருங்கள் ...:)



என் நண்பன் ...!!

தாய்மை போற்றும் உயர்வனா உறவு
உடன் பிறந்தோர் பிரிய துணையானது
துணைவி தோற்கும் இரு அன்பு போட்டி
பொய் இறந்து உண்மை வாழும் இடம்
உணர்வில் பிறந்து உயிரில் வாழும் (என்) நண்பன்

உணர்வுகள்...!!
கல்லடி பட்டாலும் வலிக்கும்
சொல்லடி பட்டாலும் வலிக்கும்
உயிரை பறிப்பவனுக்கு தண்டனை
உணர்வகள் கொன்றவனுக்கு இல்லை
மனசாட்ச்சி உள்ளவன் மரணிக்கிறான்
இல்லாதவன் மரணிக்க வைக்கிறான்

சரி பிழையில் இட  மாற்றம் ...!!
கெட்டது இல்லமால் நல்லதுக்கு ஏது மதிப்பு
நல்லவனின் சந்தோசமே கெட்டவனை காண்பது
கெட்டவன் வேஷம் இல்லை பிழையில் வாழும் சரி
நல்லவன் தந்திர நரி சரியில் வாழும் பிழை 



நினைவுகள் ...!!
நேசித்து பழகிய சொந்தங்கள் மறைந்தாலும்
உயிருக்கு உயிரான நட்புகள் பிரிய நேர்ந்தாலும்
நிஜமான காதல்கள் நிஜத்தில் இணையாத போதும்
நினைவில் தொடரும்  நினைவுகளும் நிம்மதிதான்

உன்னில் தேடு ...!!
உன்னிடம் இல்லை என்பதற்காய் 
மற்றவரில் இருப்பதை வெறுக்காதே
உன்னிடம் உள்ளவற்றை நேசி
ஒவ்வரு மனிதனிலும் திறமை உண்டு
அதை உன்னில் தேடு பிறரில் அல்ல.....!!!

முதல் ரசிகன்...!! 
என் ஆக்கங்களை முதல் ரசிப்பவன் நான்
என்னுள் வாழும் ரசிகன் வாழும் வரை
என் கலை படைப்புகள் நீ ரசிக்காத போதும்
என் கலை முயற்சி முற்று பெறுவதில்லை

மனிதனின் புலம்பல் ..!!
மனிதன்
வரமாய் கிடைத்த வாழ்கை தரம் கேட்டு வாழுறான்
சுயல போதையை சொர்ர்கம் என நினைத்து ஆடுறான்
மரணம் வரும் என்பது மறந்து மதம் பிடித்து அலைகிறான்
மரண வாயிலில் புலம்பல் கேட்டது வாழாமலே சாகிறேன்

காதல் 
அன்பில்  தொடங்கி அன்பில் முடியனும்
அது வரை தான் காதல் அது தான் காதல்
தொடக்கம் முதல் இறுதி வரை உன் காதல்
ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை எனின்
அந்த தியாக தீண்டா காதல் வேண்டாம்


அன்பு

நீ நான் அணைவராலும்
பொருள் உள்ளவனும் இல்லாதவனும்
எல்லோருக்கும் செய்ய கூடிய நன்மை
காசோ பணமோ அல்ல
கோடி கொடுத்தாலும் கிடைக்காத
இன்ப துன்பங்களில் இணைந்து பகிர்கின்ற
அன்பான வார்த்தைகளும் அணைக்கின்ற கரங்களும் தான்



பொன் & பெண்

பொன்னும் பெண்ணும்  வேறு வேறு தான்
பொன் பட்டை தீட்ட தீட்ட தான் மிளிரும்
பெண் பட்டை பூச பூச தான் ஜொலிக்கும்

 (Makeups) Cheesy


தொடரும் காதல்

பார்த்த பிறகு உடன் வரும் காதல் இனிமை
பட்டாம் பூச்சி போல் சிறகடிக்கும் சில நாள்
பார்த்து பழகி வரும் காதல் இறுதி வரை
அலைக்கும் தரைக்குமான காதல் தினமும்


♥♥♥
அப்பா 
அப்பாவின் பாசம் பலருக்கு தெரிவதில்லை 
புரிந்தவர்க்கு அது ஒரு அழகான தோழமை

♥♥♥
அண்ணன் தம்பி
சண்டையில் வளர்கின்ற அன்பு

♥♥♥
அம்மா 
மனதிலும் உடலிலும் சுமைகளை சுகமாய் சுமப்பதால் 
சுமை பெரிதல்ல அதுவும் குழந்தகளை சுமக்கின்ற போது



Friday, 19 April 2013

நான் காத்திருப்பது


நான் காத்திருப்பது 
தாயின் மடியில் தொலைத்த தூக்கத்தை தேடி 
தாய் மண்ணில் இழந்த சுதந்திரத்தை தேடி 
மனிதன் மனிதனை கொள்ளும் காரணம் தேடி 
மனிதர்கள் தொலைத்த மனிதாபிமானம் தேடி 

நிலா




இரவில் விழித்திருந்து  இமைக்காமல் பார்க்கிறது
விண்மீன்களும் ஓயாமல் கண்ணடித்து காதல்
கவிஞ்சனின் முதல் காதலி முதல் பரிசு கவிதை
காதலர்களின் காவலாய் நிற்கிறது வெக்கத்துடன்
இரவின் மொத்த அழகாய் நீ வந்து மயக்குவதால்
இதயங்கள் மயங்கியும் இமைகள் தூங்க மறுக்கிறது


Thursday, 18 April 2013

இரு முகங்கள்


ஒரே வாழ்கையில் இரு விதமான பயணங்கள்
காசு கொடுத்து அறிவை வளர்க்க செல்பவர்கள் 
வண்டி இழுத்து வயிற்று பிழைப்புக்கு நகர்பவர்கள் 
நீ பள்ளி முடித்து வாழ்கை பரீட்ச்சை எழுத வரும் போது
நான்தான் நீ படிக்க போகும் வாழ்க்கையாகவே இருப்பேன் 

Wednesday, 17 April 2013

பிரிவு தரும் இன்பம்


பிரிவு இல்லை என்றால் 
கூடலின் இன்பம் காணாய்
பிரிந்த உறவுகளின் சேர்தலில்
காத்திருந்த கரங்கள் அணைக்க  
இன்பத்தில் கண்ணீர் தித்திக்க 
பிரிவில் இருந்து பிரியாவிடை 

Tuesday, 16 April 2013

இசையுடன் காதல்


இசையுடன் காதல் 
இதய துடிப்பாய் இசை பயணம் என்னில் ஆரம்பம் 
காற்றோடு வருவதால் உனை சுவாசித்து நேசித்தேன்
எனை அறியாமலே என் இன்ப துன்பத்தில் இணைந்தாய் 
சொல்லாத காதல் தொடரும் என்  இதயம் துடிக்கும் வரை 

Monday, 15 April 2013

அநாதை...!!



அநாதை...!!
நான் சுவாசிக்கும் வரை எனக்காக சுவாசித்தாய் 
நான் பசி ஆற உணவை உதிரமாய் கொடுத்தாய் 
உயிரை உருக்கி என் உயிர் உருவம் பெறவைத்தாய்
உதிரத்தை தாய் பாலாய் தந்து பாசம் தர முன் 
உனை அழ வைத்து உனை விட்டு வந்ததால் 
எனை அழ வைத்து நீ எனை விட்டு சென்றாயோ ?
அம்மா இன்று நான் அன்புக்கு ஏங்கும் அநாதை

Sunday, 14 April 2013


கண்ணுக்கு கண்ணாக காதல் இருக்கணும்
கண்ணில் விழுந்த தூசி போல் கலங்க வைக்க கூடாது 
கண்ணை காக்கும் இமை போல நட்பு காக்கணும் 
கண்ணில் தூசி விழ முன் மூடும் இமை போல் 

Saturday, 13 April 2013




தாயின் கருவறையில்தோன்றிய கரு 
கவிஞ்னின் கற்பனையில் மலர்ந்த கவிதை 
இரண்டுமே உணர்வுகளினால் உயிர் பெறுவதால்  
கவிஞ்னின் தாயின் மன நிலை கூட ஒன்றே 
அடுத்தவர் பாராட்டினால் தித்திக்கும் 
அடுத்தவர் பறிதெடுத்தால் தத்தளிக்கும் 


Friday, 12 April 2013



முதல் நாள் காதலர் சந்திப்பில் 
முள்ளில் பூத்த ரோஜா கொடுப்பது 
முள்ளில் நான் வாழ்தேன் நீ வாழ போகிறாய் 
இன்று மரணமாக உன்கையில் நாளை நீ 
இது தான் காதல் சொல்லாமல் சொல்லும் செய்தி 


மயக்கினாலும் மயக்க முடியாது 
இறந்தவனுக்கு நோகும் என்று 
எரிக்க முன் மயக்க மருந்து கொடுப்பதும் 
எரிச்சல் பிடிச்சவர்களை விரும்ப வைப்பதும்
 :P

Thursday, 11 April 2013

சாத்தான்கள்


ஆறாம் அறிவால்   மனிதன் கண்டுபிடித்தவைகள் 
மனிதனை இன்று  ஆட்டிவைக்கும் சாத்தான்கள் 
மரியாதை முதல் மனிதபிமானம்வரை விலை போனது 
அறிவால் ஆராய்ந்த அன்பு அது முட்டாளானது
விஞ்ஞானம் மெய்ஞானத்தை விழுங்க காத்திருப்பு 
அன்பு  இன்னும் வாழ்வது  ஏழையின் வறுமையில் தான் 
மனிதாபிமானம் உயிர் வாழ்வது பணம் கூடும் வரை தான்

தொடரும் காதல்



தொடரும் காதல்
பார்த்த பிறகு உடன் வரும் காதல் இனிமை 
பட்டாம் பூச்சி போல் சிறகடிக்கும் சில நாள் 
பார்த்து பழகி வரும் காதல் இறுதி வரை 
அலைக்கும் தரைக்குமான காதல் தினமும்

Wednesday, 10 April 2013


அம்மா அது படித்து தெரிவது இல்லை 
அம்மா அது சொல்லாமல் புரிவது 
வார்த்தைகளுக்குள் அடங்காததது 
வாழ்கையையே தொடக்கி வைப்பது

பொய் பிறப்பதும் இங்கு 
உண்மை இறப்பதும் இங்கு 
உண்மை பொய் இரண்டும் 
அறிந்த ஒரே மனது உள் மனது

Tuesday, 9 April 2013

காரணத்துடன் ஒருவரை வெறுப்பது என்பது 
அணு அணு வாய் கொல்லும் புற்று நோய் போல 
காரணமே இல்லாமல் மற்றவரால் வெறுக்கப்படும் 
மன நிலை உயிரோடு கொள்வது போல 
நீ வெறுப்பதால் சாதிக்க போவதில்லை 
நீ நேசிப்பதால் சாதிக்க வைக்க முடியும்

Monday, 8 April 2013


நீ எனை உடலால் பிரிந்து சென்றும் 
என்னிடம் உள்ள உன் நினைவை 
கொள்ளும் உரிமை எனக்கு இல்லை 
நீ இறந்தும் நினைவாக என்னில் வாழ 
என் இதய நீதி மன்றத்தில் வாதாடி வென்று
நம் காதல் வாழ எனை வாழு என்றாய் 


Sunday, 7 April 2013


என் இதயம் பாரமாக இருக்கிறதே 
எனை நானே கேட்டு பின் புரிந்தது 
உனை கண்ட பின் எனக்குள் இருப்பது 
இதயம் அல்ல இதயங்கள் என்று

Saturday, 6 April 2013





கலங்கிய கண்களுடன் பார்ப்பவை எல்லாம் 
நிஜமாக இருந்தாலும் நிலைகுழைந்து தெரிவது போல் 
நீ குழப்பத்தில் உள்ளபோது எடுக்கும் முடிவுகள் 
மற்றவரை பார்ப்பதும் மதிப்பதும் தவறாக போகலாம் 

Friday, 5 April 2013




தோழ்வியில் தூக்கும் 
வெற்றியில் பாராட்டும் 

வார்த்தைகளால் வசப்படுத்தாத
சொற்களால் சுட்டெரிக்காத 

துன்பத்தில் துடிக்கின்ற
இன்பத்தில் பிரியாத

உதிரத்தில் கலக்காத
உயிர்க்கு உயிராக

இது தான் நட்பு
இருந்தால் இறுதி வரை

Wednesday, 3 April 2013


நீ கொண்ட பொறாமை தீ 
நீர் ஊற்றி அணைக்க கூடியதல்ல - அது 
பிறரை நெருங்கி நிர்கதியாக்க முன் 
உனை எரித்து நீறாக்கிவிடும் 

கண்ணீர்




கண்ணீர்



இன்பம் துன்பம் இரண்டின் போதும் 
அழையா விருந்தினர் போல் வருகிறேன் 
இயல்பாக வருவதால் இதயங்கள் இணைகிறது
பிரிவுகள் சேர நானே இறுதி விழி வழி

Monday, 1 April 2013

காதல்




                                           
உன் காதல் அடை மழை போல் 
ஓயாது பெய்து ஓய்ந்து விடும் 
என் காதல் தூரல் போல
அடை மழையின் முன்பும் பின்பு


நிஜம்




நிஜம்

நிழல் கேட்டது எனை
என்னை போலி என்றாயே
இன்று நீ ?
பொய்களை ரசிக்கும் !
பொய்களை பாராட்டும் !
பொய்களை நேசிக்கும் !
பொய்யான வாழ்கையை
சரியாக வாழ ஆரம்பிக்கிறேன்!
நான் போலி என்பதே
இன்று உலகம் நம்பும் நிஜம் 

அன்பு



                                      அன்பு 
அன்பு சொன்னால் ஆறடி ஓடுறான் மனிதன் இன்று..
ஆறாம் அறிவால் அன்பை வென்று பின் கொண்றான்..
அன்பின் தேடலும் முடிந்து அழிவின் தேடல் ஆரம்பம்..
முதலீடு மனசாட்சி அதில் முதல் அழிவு மனிதபமானம்..

ரோஜா!!!


ரோஜா!!! 
என் மரணத்தில் பலரின் காதல் ஜனனம்
என் இதழ்கள் உதிர அவர்களின் இதழ்கள் மலர்ந்தன
என் மறைவில் இவர்களின் வாழ்வு உதயம்
மறைவாக அழுதாலும் மனமார வாழ்த்துகிறேன்