Wednesday, 30 March 2016

அவள் ஒரு மாயம்

அவள் ஒரு மாயம்

என்னவள்  விழி திறந்து 
என் விழி பார்க்கும் நொடிகளில்  
குளிர் தென்றல் முத்தமிடும் சுகம் 

மயக்கும் சிரிப்பை வரம் பெற்ற மாயக்காரி 
அவள் புன்னகைக்காய் பூக்களும் காத்திருக்கும் 
பார்த்த பின்  பூக்களுக்கும் போதை ஏறும் 


தீண்டாமலே எனை தீண்டும் விந்தை   
அனுபவம் தர பிறந்தாள்  அவள் 
அனுபவிக்க பிறந்தேன்  நான் 

Wednesday, 23 March 2016

காதல் அனுபவம்

காதல் அனுபவம் 

உனை  நேர் கொண்டு பார்ப்பதை விட 
கடை கண் கொண்டு பார்ப்பதில்தான் 
காதல் சற்று அதிகம் 

நீ பார்க்கா நேரம் உனை  நோக்கும் நொடிகள் 
வார்த்தைகளில் கூற முடியா 
அனுபவம் தரும் ஆத்ம சுகம்  

காதல் அனுபவம். 
எழுத்திலும் பேச்சிலும் அல்ல  
உணர்தல் ,புரிதல், பகிர்தலில் உண்டு 


By HeartBeat( Prasanth.S)

Sunday, 20 March 2016

காதல் மாயம்

முதல் முறை 
இதழ்கள் புன்னகைத்தாலும் 
இதயங்களின் சிரிப்பொலி உணரும் 
இன்ப நொடி காதல் 

விழிகள்  பார்க்க  
இதயங்கள் தொலையும்.
சுவாசம் மறந்து நேசம் யாசிக்கும் 
புதுவித மாயம் காதல் 

By - Prasanth. S ( HeartBeat)

Thursday, 14 January 2016

இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்

இதழ் சுவைக்கும் இனிமை
பேசும் மொழியிலும் கலந்து
இதயத்திற்கும் இனிமை கூட்டி
அனைவரும் இன்புற்று வாழ
உறவினர், நண்பர்கள் , நேயர்கள் அனைவருக்கும்
இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்

#Prasanth

Saturday, 9 January 2016

காதல்

#காதல் 
இமைகள் திறந்து 
விழிகள் பேசி  
இதயங்கள் இடம் மாறி 
துடித்த முதல் அனுபவம்! 
இணைந்த இதயங்கள் 
துடிக்க மறந்து சிரித்த 
புதுவித உணர்வு 
ஆனந்த அனுபவம் #காதல்

Saturday, 19 December 2015

!! அவளுக்கே தெரியாது !!

!! அவளுக்கே தெரியாது !! 

குயிலும்  பாட கூச்ச படுகிறது  
அவள் குரல் கேட்ட பின்  

நிலவும் கவிதை எழுதுகிறது 
அவள் எழில் முகம் பார்த்து 

பூக்களுக்கும்  வியர்க்கிறது 
இவள் செவ்விதழ் மலர்ந்து சிரிக்க 

தாஜ்மஹாளுக்கும் இதயம் துடிக்கும் 
இவள் மூச்சு காற்று பட்டால் 

வானவில்லும் நிறம் மங்கும் 
அவள் நிறம் பார்த்தல் 

காற்றுக்கும் மூச்சு முட்டும் 
அவள் சுவாசம் கலந்த பின்

கடலுக்கும் தாகம் எடுக்கும் 
அவள் பாதம் நனைத்த பின் 

இத்தனையும் அவளுக்கே 
தெரியாது என்பது தான் வியப்பே..!!


ByPrasanthS

Thursday, 9 July 2015

அறிவு வரம் அல்ல சாபம்.

இருளை கண்டு பயம் கொள்பவர் 
உறங்கமால் இருந்தது இல்லை 
இருவிழி மூடின் இருள் சூழும்
பயம் , ஆசை , கோவம்,..
மனித உணர்வுகளில் பல 
கற்று கொண்ட  உணர்வுகள் 
அறிவை கழித்து பார்த்தல் 
மனித உணர்வுகளில் பல 
வளர்ப்பில் போதிக்க பட்டவை 
அறிவு என்பது 
கடவுள் மனிதனுக்கு கொடுத்த 
வரம் அல்ல சாபம்.

By - Heart Beat Santh