Friday, 26 July 2013

இருட்டில் கூட இமை திறந்து பார்த்தால் தான் 
இருள் வானில் நிலவும் நட்சத்திரமும் அழகு 
விடியும் வரை விழி மூடி ரசிப்பது காதலி அழகை 
அருகில் இருந்தாலும் சரி கனவில் வந்தாலும் சரி 


Monday, 22 July 2013

பேச்சில் வித்தை காட்டி  செயலில் ஊனமான
நம் கூட இருக்கும் மனிதர்கள் வெறும் பாரம்
நடு  தொண்டையில் சிக்கிய மீன் முள் போல்

துப்பினாலும் விழுங்கினாலும் வலி இருக்கும்

Sunday, 21 July 2013

பல சந்தர்பங்களில்
தெரிந்தோ தெரியமலோ
எமது வெற்றிகளிலும்  சந்தோசங்களிலும்
இன்னொருவர் தோற்கிறார், வேதனை அடைகிறார்
இங்கு யார் நல்லவர் யார்  கேட்டவர்

புரிந்தும் புரியாமலும் நகர்கிறது வாழ்க்கை


Thursday, 18 July 2013

குழந்தை எழுந்து நடந்த முதல் நிமிடம் 
பெற்றவருக்கு நம்பிக்கை பிள்ளை மீது 

முதன்  முதலில் காதல் சொன்ன நிமிடம் 
காதலரின் நம்பிக்கை பிரியாத வரம் என்று 

மனிதர் அறிந்த உண்மை புரிகின்ற நிமிடம் 
சுவாசித்த நம்பிக்கை இறுதி மூச்சோடு சரி 


Tuesday, 16 July 2013

ஆசை துறந்தால் சாமியாக முடியாது 
ஆசையை துறத்தல் என்பது உன் ஆசை 
யாதார்த்த வாழ்க்கை வாழ இயலாமால் 
ஒதுங்கி நின்று போதிப்பதல்ல போதனை
இயல்பாய் இணைந்து ஒன்றாய் பயணித்து 
அனுபவம் சொன்னால் ஆசை துறக்கலாம் 


Monday, 15 July 2013

மறு ஜென்மம் அதை நான் விரும்பவில்லை 
பிரிக்க முடியா  நம் காதலை அது பிரித்துவிடும் 
இறப்பு உடலுக்கு விடுதலை காதல் தொடரும் 
ஆசை துறந்த இறைவா காதலை பிரிக்காதே 


Sunday, 14 July 2013

பிறரில் சிறு முயற்சி கண்டாலும்
நம்பிக்கை கொடுக்க மறவாதீர்கள்
சிறு முயற்சி அகல் விளக்கு போல்
ஓராயிரம் விளக்குகள் ஓளி வீசலாம்

சிறு நம்பிக்கை சிகரம் தொடும் உயர்ச்சி