Saturday, 19 December 2015

!! அவளுக்கே தெரியாது !!

!! அவளுக்கே தெரியாது !! 

குயிலும்  பாட கூச்ச படுகிறது  
அவள் குரல் கேட்ட பின்  

நிலவும் கவிதை எழுதுகிறது 
அவள் எழில் முகம் பார்த்து 

பூக்களுக்கும்  வியர்க்கிறது 
இவள் செவ்விதழ் மலர்ந்து சிரிக்க 

தாஜ்மஹாளுக்கும் இதயம் துடிக்கும் 
இவள் மூச்சு காற்று பட்டால் 

வானவில்லும் நிறம் மங்கும் 
அவள் நிறம் பார்த்தல் 

காற்றுக்கும் மூச்சு முட்டும் 
அவள் சுவாசம் கலந்த பின்

கடலுக்கும் தாகம் எடுக்கும் 
அவள் பாதம் நனைத்த பின் 

இத்தனையும் அவளுக்கே 
தெரியாது என்பது தான் வியப்பே..!!


ByPrasanthS

Thursday, 9 July 2015

அறிவு வரம் அல்ல சாபம்.

இருளை கண்டு பயம் கொள்பவர் 
உறங்கமால் இருந்தது இல்லை 
இருவிழி மூடின் இருள் சூழும்
பயம் , ஆசை , கோவம்,..
மனித உணர்வுகளில் பல 
கற்று கொண்ட  உணர்வுகள் 
அறிவை கழித்து பார்த்தல் 
மனித உணர்வுகளில் பல 
வளர்ப்பில் போதிக்க பட்டவை 
அறிவு என்பது 
கடவுள் மனிதனுக்கு கொடுத்த 
வரம் அல்ல சாபம்.

By - Heart Beat Santh

Friday, 15 May 2015

காதல் !
கண்ணிமைக்கும் 
நொடிபொழுதில் 
காதல் கற்பிக்கப்படும் 

காதல் !
விழியால் 
வழி போட்டு 
இதயங்கள் இடம் மாறும் 

காதல் !
காமத்தின் தேடல் அல்ல 
இரு உயிர்கள் இணைந்து தேடும் 
புது ஜெனத்தின் தொடக்கம் 
By Heartbeat-Santh

Tuesday, 28 April 2015

உயிர் மவுனிக்க ஓவியம் பேச போகிறதா ? !!

பிழையை சரியாக செய்பவன் தப்பிக்கிறான் 
பிழையை பிழையாக செய்பவன் மாட்டிக்கிறான் 
சிறிதோ பெரிதோ பிழை பிழையே 
நம்மில் பலர் தப்பிக்க தெரிந்த குற்றவாளிகளே 
ஆயுதம் செய்பவன் அன்பை பற்றி பேசலாமா ?
எய்தவன் எவனோ அம்பை அழித்து என்ன பயன் ?
தப்பை குறைக்க மரண தண்டனை என்றால்
அந்த மரணத்தை கொடுபவர்க்கு என்ன தண்டனை 
இறக்க செய்து யாரையும் சுவாசிக்க வைக்க முடியாது 
உயிரை கொன்று உயிர்களை நேசிக்க வைக்க முடியாது !!

By Heartbeat-santh

Wednesday, 31 December 2014


யுத்தம் இல்லாது பந்தம் தொடங்க வேண்டும்

எதிரி இல்லாத ஒரு புது வாழ்வு வர வேண்டும்
அறிவாள் அழிக்க முடியாத அன்பு வேண்டும்
குறை கானது நிறை காணும் உள்ளம் வேண்டும்
புன்னகை குறையாத இன்முகம் வேண்டும்
பயம் நீங்க தனம்பிக்கை வரமாக வேண்டும்
உலகிற்கு ஒரு தேசிய கீதம் அன்பாக வேண்டும் 
குறையாத மூலதனமாக முயற்சி தொடர வேண்டும்




சந்தோசமும் சமாதானமும்
மலர்கின்ற புத்தாண்டில் தினம் தினம் நல் விருந்தாகட்டும்
By Heartbeat-santh


Monday, 28 July 2014

கல்கி அவதாராம்

உழைக்க தெரிந்தால் நேர் வழி 
பிழைக்க தெரிந்தால் ஏமாற்று வழி  
இன்று எல்லோர் மனத்திலும் 
பண ஆசை பதவி ஆசை.. 
பணமும் பதவியும் வருமென்றால் 
கால் செருப்பாகவும் இருப்பர் , காலாலும் எட்டி உதைப்பார். 
போலிகளுக்கு தான் இன்று விலையும் மதிப்பும் உயர்வு!
நல்லவர் இறந்தாலும் கெட்டவர்க்கு இரக்கம் வர போவதில்லை!!! 
நல்லவர் கெட்டவர் ஆனால் கலியுக உச்ச கட்டம் 
கல்கி அவதாராம் நடந்தாலும் நடக்கும் !!! 

By HeartBeat-Santh

Saturday, 21 June 2014

தாமரை மேல் உள்ள நீர் போல 
ஒட்டியும் ஒட்டாமலும் உன்  காதல் 
கடல் மேல் எழும் அலை போல 
ஓயாமல் பிரியமால் என் காதல் 
மீன் சுவாசிக்க நீர் வேண்டும் 
நான் சுவாசிக்க நீ வேண்டும் 

By HeartBeat-Santh