தெய்வீக தரிசனம்
உன்னை உற்று பார்க்கும் நேரம்
உறைந்து போகும் என் கண்கள்
நிஜத்தை கண்ட கண்கள்
கனவை துறந்தது கற்பனை கசந்தது
வாடாத மலர் இனம்
திகட்டாத தேன் வரம்
வண்டுகள் ருசிக்காத பூ இவள்
பருகாமல் பார்த்தாலே சுவை தரும்
உன் சுவாசம் கலந்த காற்றுக்கும் இதயம் துடிக்கும்
புயலும் உன்னை கடக்க பூக்களாய் மாறும்
வற்றாத பசுமை வசந்தத்தின் உச்சம்
மாறாது காலநிலை மாது உன் புன்னகையால்
ஆனந்த ஊற்று அழகின் எல்லை
கடவுளும் விரும்பும் கருணை
பார்வையின் தரிசனம் பக்தனின் விமோட்சனம்
ஆத்திகனும் நம்பும் தெய்வீக தரிசனம்..
Prasanth

No comments:
Post a Comment