Wednesday, 27 November 2013

தமிழீழ விடுதலைக்காக தம் உயிர்களை ஈகம் செய்த அணைத்து உன்னத ஆத்மாக்களை நானும் நினைவு கூறுகிறேன் 

விடுதலை தாகம் தீரவில்லை 
விழிகளில் ஈரம் காயவில்லை 
உயிர்களை கொடுத்தோம் 
உதிரத்தை வடித்தோம் 
உறவுகள் பிரிந்தோம்
உலகத்தை வெறுத்தோம் - இன்னும் 
விடுதலை தாகம் தீரவில்லை 
விழிகளில் ஈரம் காயவில்லை 

தமிழ் தாய் நிமிர 
தாயகம் விடிய 
நம் இனம் தலைக்க
நாம் கேட்பதில் தவறா 
உலகமே பார்க்க 
உயிர்களை கொண்டவன் 
உண்மையே செத்த பின் 
பிணம் பேசும் மனிதம்

இன்னும் 
விடுதலை தாகம் தீரவில்லை 
விழிகளில் ஈரம் காயவில்லை 

நஞ்சுள்ளம்  கொண்டவனே 
நச்சு புகை கொண்டு 
களம் ஆடி வெல்லாது 
கொன்றழித்த கோழையடா
அதர்மம் வென்றால் 
நிலைப்பதில்லை  வெறியனே
தர்மம் தலை தூக்கும் 
தாயகம் முடிவாகும் 

இன்னும் 
ஏன் கண்களில் ஈரம் தோழா !!
விடியும் ஈழம் விடி வெள்ளி காண்போம்!!

BY Heartbeat_santh


Wednesday, 20 November 2013

காதல் முன் கடவுள் பின்

பிடித்தவரை நேசிக்க ஒரு ஆயுள் போதாது 
நேசித்த ஒருவரை வெறுக்க நிமிடம் போதும் 
நேசித்தல் நேசிக்க படுதல் இலகுவில் கிட்டாது 
இலகுவில் கிடைத்தால் இறுதிவரை வராது 
கலைதயாத காதல் இருந்தால் நகராது நிமிடம்
பொறாமையின் அர்த்தம் கடவுளுக்கும் புரியும் 
By Heartbeat_Santh

Tuesday, 19 November 2013

தூக்கிலிடப்பட்ட நீதி

வாக்கெடுப்பில் நீதிகள் வழங்கி 
உயிர் போனதற்காய் நீதி கேட்டால்
ஒரு உயிர் போதாதாம் 
ஒரு இனமே சாகனுமாம்
சுட்ட பின் வரும் சுட சுட செய்தி 
இணையத்தில் இரங்கல் தெரிவித்தோம் 
இது தான் மனித நேய நவீன அவதாரம் 

By Heartbeat_santh




Wednesday, 13 November 2013

அன்பு அநாதயானால்

அன்பு அநாதயானால்

சிறு ஒளி இருந்தால் கூட 
இரு விழிகள் வழி  காட்ட 
இருள் கூட தடை இல்லை
அணைக்க முடியா அன்பு போல..!!  
  
ஆயிரம் சூரியன் இருந்தும் 
விழிகள் இல்லை எனில் 
விழிகள் விடியல் காணாது  
அநாதை பகிரா அன்பு போல..!!

By HeartBeat_Santh

Sunday, 10 November 2013

இருளில் பூக்கின்ற பூ

கருத்துக்கள் பகிரப்படா
கலைஞ்சனின் படைப்புகள் 
பேச முடிந்தும் ஊமை போல
சரி பிழை அறியா 
கலைஞ்சனின் ஆக்கங்கள் 
உயிருடன் எரிப்பதற்கு சமம்

By HeartBeat_santh


Saturday, 9 November 2013

காதலில்

காதலில் 
பிடித்தவருடன் இருக்கும் நிமிடங்களில்  
மவுனங்கள் கூட அழகாய் பேசும்..
இணைந்திருக்கும் தருணங்கள் நிஜமானவை
உண்மை அன்பு மட்டும் அரவணைக்கும் ...
காதல் இல்லாத வாழ்கையின் அனுபவம் 
கடவுளே உன் முன் வாந்தால் கூட பிடிக்காது ...

By HeartBeat_santh


Friday, 8 November 2013

தாயும் இசையும்

நல்ல இசையும் தாயும் ஒன்றே 
வெறுக்கவோ பிரிக்கவோ முடியாது 
தாயுடன் இருக்கும் சந்தோசத்தை 
நல் இசை கூட தருவதால் தான் 
இசை உள்ளவரை அநாதை இல்லை 
மொழி இல்லாமலே உணர்வுகள் பேசும் 

By HeartBeat_Santh