Wednesday, 22 June 2016

காதல் போராளி

காதல் போராளி 

தாங்க முடியாத வலியை யார் தந்தாலும் 
நெருப்பை அணைக்கும் நீராய் நீ இருந்தால் 
கவலைகள் கரையும் சுமைகளும் சுகமாகும் 


தவறுகளை மன்னிப்பதில் தாயுமானவள் 
துன்பமே நடுங்கும் இவள் பாச உச்சம் கண்டு 
என்னை   நம்பும் எனை காக்கும் காதல் போராளி 


BySprasanth

Thursday, 16 June 2016

தெய்வீக தரிசனம்

தெய்வீக தரிசனம்

உன்னை உற்று பார்க்கும் நேரம் உறைந்து போகும் என் கண்கள் நிஜத்தை கண்ட கண்கள் கனவை துறந்தது கற்பனை கசந்தது வாடாத மலர் இனம் திகட்டாத தேன் வரம் வண்டுகள் ருசிக்காத பூ இவள் பருகாமல் பார்த்தாலே சுவை தரும் உன் சுவாசம் கலந்த காற்றுக்கும் இதயம் துடிக்கும் புயலும் உன்னை கடக்க பூக்களாய் மாறும் வற்றாத பசுமை வசந்தத்தின் உச்சம் மாறாது காலநிலை மாது உன் புன்னகையால் ஆனந்த ஊற்று அழகின் எல்லை கடவுளும் விரும்பும் கருணை பார்வையின் தரிசனம் பக்தனின் விமோட்சனம் ஆத்திகனும் நம்பும் தெய்வீக தரிசனம்..

Prasanth


Tuesday, 14 June 2016

சாதல்_இறந்தது

#சாதல்_இறந்தது சுடும் வெயிலிலும்வீசும் குளிர் காற்று துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றும் மருந்து கடும் குளிரிலும் சூடேற்றி சுகம் தரும் மேனி நாணத்தால் நீ நனைய வேர்வையால் நான் குளிக்க கண்களால் கட்டி அணைத்தாய் காதல் பிறந்தது கைகளால் கட்டி அணைத்தாய் சாதல் இறந்தது எழுத்தில் எழுதி தாளில் பதிந்த கவிதையல்ல நீ உள்ளத்தில் எழுதி உயிரில் கலந்த கவிதை #பிரசாந்



Sunday, 12 June 2016

பிரியா​​_பிரியம்

பிரியா​​_பிரியம் 

இடைவெளி இல்லாத நெருக்கம் 
இதயங்கள் முத்தமிடும் தூரம் 

விழிகளுக்குள் இடைவெளி இல்லை 
பார்வையெல்லாம் நாமாக மட்டும் 

சுவாசத்தை சிறைபிடித்து சுவாசிக்கிறோம்
 காதலின் தண்டனையாக ஆயுள் வரை 

Sunday, 10 April 2016

வசந்தகால வரம்

வசந்தகால வரம் 

உன் நாணம் கண்டு 
வெண்ணிலவும் வெட்கப்படும் 
வெண்ணிறம் மாறி சென்னிறமாகும் 

நடமாடும் பூஞ்சோலை 
தேன்  கூட கசக்கும் உன் மேனி தொட்ட வண்டுக்கு 
நீ வருடம் முழுதும் வசந்தகால வரம் 

Prasanth Satkunanathan ( HeartBeat )

Monday, 4 April 2016

இயற்கையின் காதல்

இயற்கையின் காதல் 


நிலவு எழுத விரும்பும் கவிதை 
காற்று சுவாசிக்க விரும்பும் சுவாசம் 
வானவில் தோன்ற விரும்பும் தேகம் 
பூக்கள் மலர விரும்பும்  கூந்தல்  
அலைகள் தழுவ விரும்பும் இடை 
கடல் நீர்  விரும்பும் தாகம்
இயல்பை மாற்றும் இவள் இதயம் 

By Prasanth Satkunanathan ( HeartBeat )




Sunday, 3 April 2016

அழகென்பதே நீ

 அழகென்பதே  நீ 

தேவதைகள் அழகு குறிப்பெடுக்கும் 
பூலோக அழகிய அதியசம் நீ 

அரக்கற்கும் கருணை பொங்கும்  
உன் கடை கண் பட்டால் 

உன் தரிசனம் காண 
கடவுளுக்கும் கூட தவமிருக்க தூண்டும் 

By Prasanth Satkunanathan HeartBeat