Saturday, 21 June 2014

தாமரை மேல் உள்ள நீர் போல 
ஒட்டியும் ஒட்டாமலும் உன்  காதல் 
கடல் மேல் எழும் அலை போல 
ஓயாமல் பிரியமால் என் காதல் 
மீன் சுவாசிக்க நீர் வேண்டும் 
நான் சுவாசிக்க நீ வேண்டும் 

By HeartBeat-Santh

Thursday, 19 June 2014

கண்கள் பேசாது 
இதயங்கள் பேசி 
காதல் பிறந்து இருந்தால் 
பார்வைகள் விலகும் போது காதல் பிரியாது 
இதயங்கள் துடிக்கும் வரை காதல் உயிர்த்திருக்கும் 

By HeartBeat-Santh


Sunday, 1 June 2014

இசைஞானி இளையராஜா - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தாலாட்டை தாய் பாடுவதற்கும் 
பிறர் பாடுவதற்கும் 
உள்ள வித்தியாசமே 
இசைஞானியின் இசை 

முதல் காதல் அனுபவம் 
தொடரும் இனிய தோழமை 
அன்னை மடியில் உறங்கும் சுகம் 
மழையில் நனையும் சுகம் 
சுகமான அனுபவங்களின் 
ஒட்டுமொத்த இசை வடிவம்
இசைஞானியின் இசை 

தனிமைக்கு துணை வருவது 
இருட்டிற்கு வெளிச்சம் தருவது 
துன்பத்தை மறக்கடிப்பது 
இதயத்தை துடிக்க வைப்பது 
இயற்கையான இசையை 
அறிவு கொண்டு ஆராயமால்
அனுபவம் தந்து ரசிக்க வைப்பது 
இசைஞானியின் இசை  

காற்றும் காதலும் உள்ளவரை 
இசைஞானியின் இசை இருக்கும் 

இசைஞானி இளையராஜா 
உடல் நல ஆரோக்கியத்துடன் 
நல் இசை தரும் அவரது பணியை தொடர 
நாங்கள் அனைவரும் சேர்ந்து 
அவரது இனிய  பிறந்தநாளில் 
வாழ்த்துவோம் 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 
இசைஞானி இளையராஜா

By HeartBeat-Santh


Saturday, 31 May 2014

தக்கன பிழைத்து வாழ்தலில் 
ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்து 
வாழ வேண்டிய சூழல் வரலாம் அது இயற்கை 
ஆனால் ஆறாம் அறிவு கொண்ட 
மனித இனம் மட்டுமே 
தன் இனத்தையே தான் அழித்து 
பின் தற்பெருமையும் பேசும்!! 

By HeartBeat-Santh

Monday, 26 May 2014

சுபம்

எமக்கெல்லாம் இரு இதயங்கள் 
ஒன்று எம்முள்ளே உள்ள இதயம் 
இன்னொன்று வெளியே உள்ள இதயம் இயற்கை 
உயிரோடு விளையாடாமல் 
உயிரோடு உயிராக 
உறவாடுங்கள் 
சுபம்

By HeartBeat-Santh


Saturday, 24 May 2014

மனிதனுக்கும்
காவல் காக்கும் வெருளிக்கும் 
வித்தியாசம் இல்லை 
என் சொல்லாமல் சொல்லி 
பயந்து  பறக்கின்றன
இரை தேட வந்த 
பறவை கூட்டம் 

By HeartBeat-Santh

Thursday, 22 May 2014

முற்று புள்ளி

மழையில் நனைந்தால் 
மரங்கள் துளிர்கின்றன 
மலர்கள் சிரிக்கின்றன 
மனிதன் மட்டும் தான் 
மரண பயத்தில்
குடை பிடிக்கிறான் 
ஆனந்தத்தின் 
முற்று புள்ளி 
அறிவு 

By HeartBeat-Santh