Thursday, 29 August 2013

காலத்தின் மாற்றத்தின் உச்ச கட்ட தீண்டாமை
துஷ்டனை கண்டால் தூர விலகி நின்றது போய்
நல்லவரை கண்டால் எட்டியே வைக்கிற காலம் 
ஏமாற்ற தெரிந்தவன் உலகம் பாராட்டும் அறிவாளி
பிழையாக வாழ்ந்தால் மட்டுமே சரி போடும் மாயம்

அநீதி முதலீடாம்  நீதி வியாபாரமாம் வேஷ உலகம்

Tuesday, 27 August 2013

தொலை தூர பயணத்துடன்
துணை நின்ற உறவுகள் பிரிகின்ற தருணம்
அழகிய ஒரு கனவு கலைந்தது போல வலி
நினைவுகள் வேகமாய் வந்து குவிய
நீருக்குள் மூழ்கி தத்தளிப்பது போல்

வாழ்கை கேள்வியாக கண்ணீர் பதிலானது

Friday, 16 August 2013

பிறக்கும் வரை சுமப்பது அன்னை
இறந்தாலும் சுமப்பது பூமி அன்னை
உனை மிதித்தும் மறந்தும் வாழ்கிறோம்
இருந்தும் காக்கிறாய் உலக அன்னையாவதால்
உன் மடியில் மண்டியிட்டு வணங்குகிறேன்

தாய் இல்லா எனக்கு புரிகிறது உன் அருமை 

Saturday, 3 August 2013

குருதியில் கலந்த உறவுகள் பிரிந்து சென்றாலும்
உறுதியுடன் உதித்த நட்பு தான் சேர்ந்து நிக்கிறது
உலகம் வேறு பாடு கடந்து கை கோர்த்து நடப்பது
இன மத மொழி கடந்த நட்பெனும் ஒரே பாதையில்
நட்பு மட்டும் இல்லை எனில் நாம் தனி தனி தேசமே
நட்பை படைத்த பெருமை எமக்கே இறைவனுக்கல்ல
அணைத்து நட்புள்ளங்களுக்கும்

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்