இதய துடிப்பின் கவிதை துடிப்பு
இதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)
Sunday, 30 March 2014
விழி வழி
மை இட்ட உன் விழியால்
நீ என் நெஞ்சில் எழுதிய
வாசிக்க முடியாத
உணர முடிந்த
உயிர் உள்ள கவிதைதான்
நம் காதல்
By HeartBeat-Santh
Wednesday, 26 March 2014
தாலாட்டு
தொட்டிலில் ஆட்டி
தூங்க வைப்பதை பார்த்தது உண்டு
எனக்கும் நடந்திருக்கும்
ஆனால் ஞாபகம் இல்லை
ஆனால் உன் நெஞ்சிலே
தொட்டில் ஆனா நாள் முதல்
தூக்கமும் இல்லை துக்கமும் இல்லை
இந்த ஞாபகம் தொலைய போவதும் இல்லை
By HeartBeat_Santh
Tuesday, 25 March 2014
சிற்பி
உயிர் ஒன்று உருப்பெற
இடம் தந்தவள் தாய்
உலகின் சிகரம் தொட
கரம் தந்தவர் தந்தை
தன் மூச்சில் எனை
சுவாசிக்க வைத்தவள் தாய்
தன் மூச்சு இருக்கும் வரை
எமை செதுக்கிய சிற்பி தந்தை
By HeartBeat_Santh
Sunday, 23 March 2014
என்ன இனம் ??
கருணையும் காதலும்
இல்லை என்றால்
நீ விலங்கும் இல்லை
வேற ஏதோ ஒரு பிறப்பு
சக மனிதரை கொன்று
வென்று வாழ நினைக்கும்
புதுமையான சிரிக்க தெரிந்த
நகருக்குள் வாழும் ??
By Heartbeat_Santh
Friday, 21 March 2014
ஈர இதயம்
ஈர நிலத்தில் நீ நடந்து
வழுக்கி விழும் போதெல்லாம்
ஈர நிலம் என் இதயம் ஆகாத
என என்ன தோன்றுகிறது
அப்போதாவது ஒரு முறையேனும்
என் இதயத்தில் விழுவாய் அல்லவா ;)
By HeartBeat-Santh
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)