வானொலி
காற்றிற்கு
மொழி கொடுத்த முத்தமிழ் ஆசான்
காற்றிற்கு
இசை தாகம் ஊட்டிய இசை
அருவி
காற்றலையோடு
உலா போகும் குரல்
அமுதம்
உலகெங்கும்
உறவான உண்மை தோழன் வானொலி
சமூக அக்கறைக்கான விழி மூடா கடமை
மக்களின்
தேவை அறிந்து செய்யும் சேவை
உரையாடல்
மூலம் விழிப்புணர்வை தூண்டும்
மக்கள் குரல் ஒலிக்கும் மக்கள்
மன்றம் வானொலி
உலகை இணைத்த முதல்
மொழி இணையம்
மொழி மூலம் விழியில் தோன்றிய
காட்சிகள்
பலதரப்பட்ட
செய்திகள் பலன்கள் நிறைவாக
பேராபத்தை
தவிர்க்கும் பேரன்பு வானொலி
செவிக்கு இசையால்
இன்ப தேன் ஊற்றி
இதயத்திற்கு சுவை
ஊட்டும் உணர்வு
கவலைகள் மறந்த தொடரும்
பயணத்தில்
துணைவரும் இனிய
தோழன் வானொலி
வானொலியின் தொடர்
பயணம்
வரும் நேயர்களின்
நேச ஆதாரம்
நன்றி எதிர்பாரா
பிரியா பிரியம்
நேயர்களின் நேச
நாடியில் ஓடும் குருதி வானொலி
பொழுது போக்கோடு
பொறுப்பும் நிறைந்தது
அரசியல் பொருளாதாரம்
மருத்துவம் கல்வி - என
அனைத்திலும் பங்கெடுக்கும்
பயன் கொடுக்கும்
ஓர் இனத்தின் அடையாளமும்
அங்கீகாரமும் வானொலி
By Prasanth Satkunanathan
No comments:
Post a Comment