Friday, 1 June 2012

இசை தெய்வம் ♫

இசை தெய்வம்
தாயின் தாலாட்டு நினைவில் இல்லை
நினைவு தெரிந்து நான் கேட்கும் தாலாட்டு
தாய்க்கு ஈடாக எனை தாலாட்டும் இசை
இன்றும் கிடைக்கும் தாயின் அரவணைப்பு

இதயங்கள் வலித்த போதெல்லாம்
இளையராஜாவின் இசையை கேட்டது
இலவச மருத்துவம் நீ தந்த அதிசயம்
இதய துடிப்பாய் எல்லோரிலும் நீ

இறைவனை தேடல் எல்லோர்க்கும் உண்டு
கண் திறந்து தேடினேன் காணவில்லை
கண் மூடி தேடினேன் உன் இசையோடு
இசையும் இறைவனும் உணரத்தான் முடியும்

மழலைக்கு உன் இசை ஒரு தாய்
இளையவருக்கு உன் இசை ஒரு காதல்
முதியவருக்கு உன் இசை ஒரு கடவுள்
வாழும் வரை உன் இசை என் சுவாச காற்று


இசை தெய்வம் இளையராஜாவிற்கு எனது
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இறைவன் அவரிற்கு நல் உடல் உள ஆரோக்கியம் கொடுத்து
அவரின் தெய்வீக இசை பணி தொடர
எனது வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment