Saturday 2 June 2012

நட்பின் நாடகம்


நட்பின் நாடகம்

அழகாய் வந்த நட்பு வானவில் போல
அன்பாய் சிரித்து  ஆறுதல் பேசியது -இன்று
நம் உறவு இடியுடன் கூடிய மழை போல
இதயம் துடித்து கண்ணீர் மழை

முக பார்க்கும்  கண்ணாடி போல
அழுதால் அழுதாய் சிரித்தால் சிரித்தாய் -இன்று
பார்வை இருந்தும் குருடனை போல
அழுவது தெரிந்தும் அலட்டாமல் விலகுறாய்

ஊக்கம் கொடுத்தாய் உடன் பிறந்தவர் போல
மனம் விட்டு ரசித்தாய் மழையை போல் -இன்று
பனி போர் புரிகிறாய் சகுனியை போல
பிறர் எனை பாராட்டுவது பிடிக்காமல்

தூரத்தில் உள்ள சூரியன் போல
ஒளி தந்தாய் வலி தரவில்லை -இன்று
நெருங்கி வந்த சூரியன் போல
எரிந்து நீறானது நீண்ட நாள் நட்பு

கடும் தாகத்தின் பின் அருந்தும் நீர் போல
நீ தந்த நட்பின் சுகம் நான் உணர்ந்தேன் -இன்று
உருகும் மெழுகு திரி போல
உருகிறேன்  நீ  நினைவில் வரும் போதெல்லாம்

வழி தந்து விழி பிடுங்கும் போலியான நட்பு
அன்பு தந்து பின் நெஞ்சில் அம்பு பாச்சும் நட்பு
புரிந்து வந்து பின் இறுதியில் பிரிந்து செல்லும்  நட்பு
நட்பின் வளர்ச்சி பிடிக்காமல் நாடகம் போடும் நட்பு
ஆரம்பத்தில் எனை பிடிக்க காரணமாய் இருந்த காரணங்கள் -இன்று
எனை வெறுத்து விலக உனக்கு காரணமாகியது
எனை பிடிக்காமல் பிடித்தது போல் பேசும்
உன் நாடக நட்பு எனக்கு தேவை இல்லை

1 comment:

  1. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

    ReplyDelete