Wednesday, 22 May 2013


உன் சிரிப்பில் சீர்குழைந்து போவது  மனம் 
அறிவு  தடுத்தாலும் இதயம் வழி விடுகிறது 


நீ ரசிக்கும் அழகை நான் ரசிப்பது ஒரு சுகம் 
உன் அருகில் இருக்கும் போதும் மட்டுமே 


அம்மாவின் தாலாட்டில் கண் மலர்ந்தேன் 
ஊஞ்சல் ஆட்டத்தில் மனம் மகிழ்கிறேன் 

Saturday, 18 May 2013



மனிதாபிமானமற்ற கொடியவர்களாலும் 
மனிதாபிமானம் உள்ள கோழைகளாலும் 
சூதாட்ட வேள்வியில் விலையற்ற உயிர்காளாய் 
நாம்  வாழ்ந்த பூமியில் நாதியற்று இறந்தோம் 
உலக அரக்கர் கூட்டமே எமை  கொன்று படம் எடுத்து 
உலக திரையில் இடப்பட்ட உண்மை காட்சி இது 
இனியும் மனிதம் பற்றி பேசுபவர்கள் 
இருகின்ற உயிர்களை இன்னும் பலி கொடுக்க மட்டுமே 
மனிதாபிமானமே அற்று போன உலகில் 
மானம் கேட்டு வாழ்வது எனக்கு அசிங்கம் அல்ல 
இறந்தவர் பேசுறோம் இருப்பவரை  வாழ விடு 

Saturday, 11 May 2013


எனது அன்னைக்கும்♥ 
அணைத்து அன்னையர்களுக்கும் ♥
எனது இதயம் நிறைந்த அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்♥ 
Poem, Voice & Video Edited by ♥HeartBeat-Santh♥


ஜனனம் முதல் நான் நீ அனைவரும் 
அதிகளவில் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தை அம்மா!
நான் அழ நீ சிரித்த ஒரே நாள் 
நாம் இருவரும் பார்த்து கொண்ட முதல் நொடிகள் மட்டுமே அம்மா!
உயிர் போகும் வலியில் கூட உயிர் தந்து 
நாம் உயிர் போகும் வலி கொடுத்தாலும் உயிராய் நேசிப்பது அம்மா!
எமை எல்லாம் படைத்தது, காத்து
கெட்டதை அழித்து அந்த இறைவனுக்கும் இறைவன் அம்மா!
அன்புக்கு பொறுமைக்கு உண்மைக்கு 
அணைத்து நல்ல வார்த்தைகளின் ஒரே உதாரணம் அம்மா!
உண்மையான நேச பரிமாற்றம் 
வேஷம் அற்று வெளிபடையாக பெறுவது நாம் தருவது அம்மா!
ஆயிரம் மாற்றங்கள் வந்தும் மாறாதது 
காலத்தால் மாற்ற முடியாத மாற்றங்கள் இல்லாதவள் அம்மா!
இறைவனின் வரமாகவும் இயற்கையின் கொடையாகவும் 
எமை காத்து நிற்கின்ற கண் கண்ட தெய்வம் அம்மா!
நாம் எல்லோரும் இணைகின்ற 
ஒரே கலாச்சராம் கருவறை தாங்கிய கோவில் அது தான் அம்மா!

Wednesday, 1 May 2013

கடவுள் இருந்தால் மதம் ஒன்றே


கடவுள் இருந்தால் மதம் ஒன்றே 

வந்த இடம் கருவறை கடவுள் தீர்மானித்தார் 
போகும் விதம் பல முறை மனிதன் மாற்றினான் 
கடவுள் ஒன்று இருந்தால் அந்த கடவுளையும் 
பிரித்து வைத்து பார்த்தவன் மானிடன் தான்