!! அவளுக்கே தெரியாது !!
குயிலும் பாட கூச்ச படுகிறது
அவள் குரல் கேட்ட பின்
நிலவும் கவிதை எழுதுகிறது
அவள் எழில் முகம் பார்த்து
பூக்களுக்கும் வியர்க்கிறது
இவள் செவ்விதழ் மலர்ந்து சிரிக்க
தாஜ்மஹாளுக்கும் இதயம் துடிக்கும்
இவள் மூச்சு காற்று பட்டால்
வானவில்லும் நிறம் மங்கும்
அவள் நிறம் பார்த்தல்
காற்றுக்கும் மூச்சு முட்டும்
அவள் சுவாசம் கலந்த பின்
கடலுக்கும் தாகம் எடுக்கும்
அவள் பாதம் நனைத்த பின்
இத்தனையும் அவளுக்கே
தெரியாது என்பது தான் வியப்பே..!!
ByPrasanthS
arumai
ReplyDelete