Wednesday, 30 March 2016

அவள் ஒரு மாயம்

அவள் ஒரு மாயம்

என்னவள்  விழி திறந்து 
என் விழி பார்க்கும் நொடிகளில்  
குளிர் தென்றல் முத்தமிடும் சுகம் 

மயக்கும் சிரிப்பை வரம் பெற்ற மாயக்காரி 
அவள் புன்னகைக்காய் பூக்களும் காத்திருக்கும் 
பார்த்த பின்  பூக்களுக்கும் போதை ஏறும் 


தீண்டாமலே எனை தீண்டும் விந்தை   
அனுபவம் தர பிறந்தாள்  அவள் 
அனுபவிக்க பிறந்தேன்  நான் 

Wednesday, 23 March 2016

காதல் அனுபவம்

காதல் அனுபவம் 

உனை  நேர் கொண்டு பார்ப்பதை விட 
கடை கண் கொண்டு பார்ப்பதில்தான் 
காதல் சற்று அதிகம் 

நீ பார்க்கா நேரம் உனை  நோக்கும் நொடிகள் 
வார்த்தைகளில் கூற முடியா 
அனுபவம் தரும் ஆத்ம சுகம்  

காதல் அனுபவம். 
எழுத்திலும் பேச்சிலும் அல்ல  
உணர்தல் ,புரிதல், பகிர்தலில் உண்டு 


By HeartBeat( Prasanth.S)

Sunday, 20 March 2016

காதல் மாயம்

முதல் முறை 
இதழ்கள் புன்னகைத்தாலும் 
இதயங்களின் சிரிப்பொலி உணரும் 
இன்ப நொடி காதல் 

விழிகள்  பார்க்க  
இதயங்கள் தொலையும்.
சுவாசம் மறந்து நேசம் யாசிக்கும் 
புதுவித மாயம் காதல் 

By - Prasanth. S ( HeartBeat)