மலர்கள்
மலர் மேல் விழி படும் அனுபவம்
எழுதப்படாத வரிகளுக்கு
இதயம் மெட்டு இசைத்து பாடும்
இன்னிசை உணர்வு
பூமியில் பூக்களின் உதயம் புன்னகை வரம்
மங்கையர் புன்னகை கற்றது மலர்களிடமே
இயற்கையின் எழில் மலர்களால் மகுடம்
பார்வை படும் இடம் எல்லாம் பல வண்ணக் கோலம்
காலங்கள் மாறினாலும் மாறாத
முதல் காதல் பரிசு ஒரு மலரே
கூந்தலில் சூடும் மலர்கள்
அழகை மட்டுமல்ல பெண்மையையும் கூட்டும்
ஆசீர்வாதம் முதல் அனைத்து கௌரவிப்பிலும்
முதல் மரியாதை பெறும் மலர்கள்
சந்தோச துக்க நிகழ்வுகள் அனைத்துமே
மலர்கள் இல்லாது முழுமை அடைவதில்லை
ஆடம்பரம் முதல் அனைத்து சடங்கிலும்
வலம் வரும் மலர்களின் ஆயுள் குறைவே
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பிடித்த மலர்கள்
குறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்க்கை
By Prasanth Satkunathan ( HeartBeat)
No comments:
Post a Comment