Tuesday 3 April 2018

மீண்டும் மலர வேண்டும் மனித நேயம்

மீண்டும் மலர வேண்டும்  மனித நேயம்

இயந்திரமாய் மாறி விட்ட இவ்வுலகில் இன்று
மனித இதயம் மிக இறுகி தான் போய் விட்டது

ஆறு அறிவு படைத்த அழகிய மனித இனம் இன்று
நகரத்துள் வாழும் விலங்கு போல் ஆகி விட்டான்

எம்மை படைத்து காத்து நிற்கின்ற இரு கண்ட 
தெய்வங்கள் ஒன்று தாய் ,இன்னொன்று பூமி தாய்

அன்று மனிதன் தாயை,பூமியை வணங்கி பலன் கண்டாண்
இன்றைய மனிதன் அதை தூசித்து துயரம் கொள்கிறான்

இன்று மனித நேயம் வாழுமே ஆனால் அது இருப்பது மழழைகள் சிரிப்பிலும் அவர்களின் அழுகையில் மட்டுமே

அன்பின் ஒற்றை சாட்சி உன் சந்தோச/துக்க தருணத்தில்
நீ விடும் கண்ணீர் ஒன்றே,அன்பே இல்லை கண்ணீர் எப்படி?

மூட நம்பிக்கை குறைந்ததது ஒரு முன்னேற்றம் என்றாள்
மற்றவர் மேல் நம்பிக்கை அற்று போனது அதோ பரிதாபம்

நீ பெரிதா  நான் பெரிதா என ஓடும் மானிடா
இறுதியில் நீ ஓடி சேரும்  இடம் ஒன்றுதான் அது சுடு காடு

சிரிக்க நேரம் இல்லை, அழவோ அறவே பிடிக்கவில்லை
நீ அன்பும் காட்டவில்லை ,இறுதியில் உன் கூட யாருமில்லை

மரணவீடுகளில் இன்று மணவீடுகளுக்கு நிகரான கொண்டாட்டம்
சாட்டுக்கு ஒலி பெருக்கி முன்னால் ஒரு சொட்டு கண்ணீர்


அன்பு, நட்பு, காதல்,இன்று வெறும் ஆடம்பரமான  வார்த்தைகள்
உண்மையில்  யாருக்கும் உண்மையான  ஒரு உறவு இல்லை

இயற்கையை மனிதன் பூசித்தான் பின் அழித்து ருசி கண்டான்
இன்று இயற்கை அவனுக்கு பாடம் கற்பிக்கிறது சுனாமியாக 

இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் உள்ள ஒரு குறுகிய காலம்
அதில் நாம் பணத்துக்கும் பகட்டுக்கும் பகடகாயகிவிட்டோம்

சுயநலம்,பொறாமை ,போட்டி,பணம்,போதை,காமம்,பேராசை நம்பிக்கையின்மை  இவற்றில் ஏதேனும் ஒரு பாதிப்பின்றி  யாருமில்லை

நிம்மதியான் உறக்கம்,இனொருவரை கண்டால் அகம் மலர்தல்,
மனம்விட்டு சிரித்தல், மற்றவரை பாரட்டல்,உன்னால் முடியுமா?

தேய்பிறையாகவே இருக்கும் மனித நேயம் ,வளர் பிறையாவது
ஒவ்வொருவர் கையிலும் உள்ளது.. உன்னால் முடியும்!!

மனித நேயம் நம்முள் மீண்டும் மலர வேண்டும் 
அனைவரும்மனம்விட்டு சிரிக்க வேண்டும் 
கண்கள் கண்ணீர் காணும்வரை

By HeartBeat-Prasanth Satkunanathan

No comments:

Post a Comment