காரணம்
வாழப் பிறந்த நாம்
வாழ்ந்து முடிப்பதற்குள்
செத்து செத்துப் பிழைக்க காரணம்
ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவற்ற செயல்களே
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
இடம் பெறும் தீமைகளின்
அடிப்படைக் காரணம்
இயற்கையுமில்லை இறைவனுமில்லை , மனிதனே!
நாம் மனிதர் என்று ஏற்காது
மனிதனில் புனிதானாய் அறிஞ்னாய்
அடையாளப் படுத்திய காரணம்
மனித ஏற்ற தாழ்வுகளின் ஆரம்பம்
சுய லாப நோக்கங்களிற்க்காக
மனித உணர்வுகளை வியாபாரமாக்கி
பணம் கண்ட காரணம்
கற்பும் காசென்றால் விலை போனது
இறை வழி பாடும் நம்பிக்கையும்
மனிதனை நல் வழி படுத்தவே
பக்தியை மிஞ்சிய ஒரு பயமே காரணம்
இல்லை எனில் உடன் இறக்கும் மனிதம்
மனித உணர்வுகளில் வேறு பாடில்லை
மனித ஆசையிலும் அறிவிலுமே
உணர்வுகள் ஆசைகளை அடக்காத காரணம்
மனிதன் சக மனிதனை மதிக்காது எதிரியானான்
மனித ஒழுக்க நற் பண்புகளை
சட்டங்கள் ஆயுதங்களால் நெறி படுத்த முடியாது
சட்டங்கள் மீற சட்டங்கள் காரணம்
போர்கள் தொடர ஆயுதங்கள் காரணம்
புரியாமல் விமர்சிக்காதீர்கள்
அறியாமல் ஆத்திரப்படாதீர்கள்
அன்பு செய்யக் காரணம் தேவை இல்லை
நட்பாய் இருக்க தகுதி தேவை இல்லை
என்நிலை வந்தாலும் மனிதனாய் இருக்கங்கள்
யாராக இருந்தாலும் மனதாரப் பழகுங்கள்
தீமை யார் செய்தாலும் காரணம் நீயும் ஆவாய்
மனிதனாய் நீயும் இரு பிறரையும் இருக்க விடு
By Prasanth satkunanathan ( HeartBeat)
No comments:
Post a Comment