தெய்வக் குழந்தைகள் இன்பவரம்
அழுது கொண்டே கண்
விழித்தாலும்
மண் வந்த மழலை ஆனந்த
வரம்
கைகைளில் தாங்கிய
முதல் அனுபவம்
கண்களில் நீர்த்துளி
இதழ்களில் புன்னகை
நீண்ட துயில் கொள்ளும்
மழலை மாயம்
முகத்தில் நொடிக்கு
நொடி மாறும் பாவங்கள்
அழுவதும் சிரிப்பதுமாய்
மாறும் ஆனந்த ஆச்சரியங்கள்
விழி திறந்து பார்க்கக் காத்திருக்கும் விழி மூடாப் பெற்றவர்
குழந்தை கண் சிமிட்டும்
நொடிகள்
பகல் நேர நட்சத்திரங்களின்
தரிசனம்
காந்த விசை தோற்கும்
கண்களின் ஈர்ப்பு
நகராது விலகாது
நாமெல்லாம் ரசிகராய்
மழலையின் சிரிப்பைக் கண்டு மறையாத வானவில்
கபடமற்ற சிரிப்பில்
கரைந்து போகும் கவலைகள்
யாராலும் வெறுக்க
முடியாத விரும்ப்படும்
குழந்தையின் சிரிப்பே
பூமியில் நிஜ அழகு
மழலையின் குறும்பைக்
கண்டு கோபம் கூட கொஞ்சும்
மண்ணை உண்ட கண்ணனனின்
தரிசன அனுபவம்
உணவு நேரப் போர்க்களம் அழகான ராட்ஷகர்கள்
வெண்ணை உண்ட கண்ணனாய்
கொள்ளை அழகு
அம்மா அப்பா என
அடையாளம் தந்து
வாழ்க்கைக்கு அர்த்தமும்
சந்தோசமும் தந்து
அம்மா அப்பா என்று
அழைக்கும் நேரம்
ஆனந்த எல்லை வரை
கூட்டிச் செல்லும்
இதை விட இன்பம்
ஏது எனப் பூரிக்க வைக்கும்
தெய்வக் குழந்தைகள் இன்பவரம்
By Prasanth Satkunanathan - Heartbeat
No comments:
Post a Comment