அடிமையாக இருந்திருந்தால் கூட
அனாதையாக இறந்திரோம்!
அகிலமே பார்க்கச் சிதைந்து விழுந்தோம்
நிர்வாணப் பிணங்களாக!
இணையோம்! பிரிவோம்!
என்றால் பிணங்களே தொடர் புள்ளி...
இறந்தவர் பேசுகிறோம்
எங்களை மதிப்பின் இணைந்து வாருங்கள்!
எங்களை வைத்து அரசியலும் ஆதாயமும் தேடுபவர்கள்
இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு நாள் பார்ப்பவர்களே!
எங்களை மறவாது நினைத்து நேசிப்பவரே
உங்களோடு இருப்பவரை மதித்து அணைத்து வாழுங்கள்!
இன்னொரு முள்ளிவாய்க்கால் இனியும் வேண்டாமே!!!
By Prasanth Satkunanathan.
No comments:
Post a Comment