#சேலை
தமிழ் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாய்
தமிழ் மான காப்பாய் தாய் நாட்டின் உயர்வாய்
பல வண்ண சேலைகள் நடமாடும் வானவில்லாய்
சேலைகள் பூமி எங்கும் புன்னகைக்கும் கோலங்களாய்
சேலை அணியும் பெண்கள் யாவருமே
மெய்யாகவே விழி வியக்கும் உலக அழகு
சேலையின் மதிப்பு விலை அடைப்படையில் மாறலாம்
விலை மதிப்பற்ற அழகு என்பது சேலையில் பெண்கள்
பெண் தெய்வங்கள் சேலையில் தரும் உணர்வு தாய்மை
பெண்கள் சேலையில் வந்தால் லக்ஷ்மி கடாட்ஷம்
சேலையில் பெண் தெய்வங்கள் தெய்வீக பேரழகு
சேலை கட்டிய பெண்களில் தெய்வம் தெரிவது பெண் பாதுகாப்பு
அம்மாவின் சேலை சுக உறக்கம் தந்த ஆனந்த தொட்டில்
அம்மாவின் சேலையில் சுவாசமும் வாசமும் அன்பின் எல்லை
அம்மாவின் சேலையில் பயமற்ற பாதுகாப்பு வாழ்வு
அம்மாவின் சேலை அரவணைப்பு ஆயுட்கால நிகரற்ற ஆனந்தம்
பெண் அழகிற்கு பெருமை சேர்த்து
பெண் மானத்திற்கு காவல் காத்து
உலகெங்கும் தமிழ் அடையாளமாய் வலம் வரும்
சேலையின் வரமும் வாழ்வும் பெண்கள் பெற்ற கொடை
By - Prasanth Satkunanathan
No comments:
Post a Comment