மௌனம்
தவறைத் தட்டிக் கேட்காத மௌனம்
அதர்மத்தை மொழியால் கொல்லாத அநீதி
தர்க்கத்தை வளர விடாத மௌனம்
மொழியை சிறைப்படுத்தி மோதலை தவிர்க்கும்
விழிகள் பேச மொழிகள் மௌனிக்க காதலானது
மொழிகளின் இடைவேளை இரு இதய நெருக்கம்
காதல் மௌனத்தில் காமம் கற்பிக்கப்படும்
மௌன மொழி மந்திரங்கள் மயக்க இன்பம்
பிறப்பால் ஊமை உணர்வுகள் மொழியானது
செயல்கள் பேச மொழிகள் ஆச்சர்யம் கொண்டது
ஒலி உருவாகாத போதும் உண்மை கருவானது
மொழி இழந்து வாழ்வது சாபமல்ல சாதனை
மொழிகளின் உறக்கம் ஆழ் மனதின் விழிப்பு
அமைதியான நேரம் மனசாட்சி பேசும் நேரம்
குழப்பங்கள் தீரும் நல் முடிவுகள் உதயமாகும்
கற்பனை சிறகு முளைத்து காவியங்கள் உருவாகும்
பிறர் பேசும் போது கடை பிடிக்கும் மௌனம்
மரியாதை மட்டுமல்லாது பேசுவதும் மனதில் பதியும்
அவை நாகரிமும், அடுத்தவரோடு பேசும் போதும்
மௌனம் என்பது மரியாதையின் அடையாளம்
மொழிகள் பேசாது உள்ளம் பேசும் போது
காதலும் கவிதையும் உள்ளத்தில் கருவாகும்
மௌனம் பதிலாக மகிழ்ச்சி பரிசானால்
மௌனம் கூட உன்னை வளர்க்கும் வழி
By Prasanth Satkunanathan ( HeartBeat)
No comments:
Post a Comment