#சமையல்
உணவின்றி
உயிர் வாழாது உயிர்கள்
சமைத்துண்டு
வாழா உயிர்கள் ஓராயிரம்
ஆறறிவு மனிதனே சமைத்து உண்பவன்
சமையலில்
ருசி கூட்டி சுவை அறிந்தான்
சமையல் கற்பனைகளின் கைவண்ணக் கலை
மனித நாக்கே சுவை அறிந்த
மகா ரசிகன்
உண்பது ஆனந்தம் உணவு செய்வது
பேரானந்தம்
சமையல் இல்லத்திலும் உள்ளத்திலும் சந்தோசம்
வீட்டுச்சமையிலில்
முடி சூடா ராணி பெண்கள்
ஆண்கள் கூட அவரசத்திற்கு இடைக்கால
ராஜாக்கள்
சமையலில்
கைப்பக்குவம் என்பது பசி நீக்கும்
சாதனை
வீட்டில்
அளந்து சமைப்பதல்ல அன்புபோடு சமைப்பது
சமைத்து
வழங்கவும் உணவில் அன்பின் பரிமாற்றம்
சமையல் தரும் ஆத்ம சந்தோசம்
உறவுகளின் நெருக்கம்
அன்பும்
காதலும் சமையல் வழி தினம்
தினம் கூடும்
இணைந்து
சமைப்பதில் ஒற்றுமையும் இன்பமும் இரட்டிப்பு
சமையல் என்பது சாதாரணம் அல்ல
சாதனை
சமையல் என்பது வியாபார மூலதனம்
ஆனால்
அறிந்த கலை மூலம் பணம்
சேர்க்கும் வழியாகும்
சமையல் கலை சந்தோச
சாதனை வரம்
சமையல் வழி அகில
சந்தோசம் உணவு
உறவுக்குள்
உண்மை உண்ணும் உணவின் வழி
ஒற்றுமை
கற்றுத்தந்த சமையல் விருந்துபசாரம்
வீட்டில்
அன்பில் பெருக்கம் வெளியில் பணப் பெருக்கம்
By Prasanth Satkunanathan
No comments:
Post a Comment