சமாதானம்
சண்டை இல்லாத சந்தோச
வாழ்விற்காய்
துரோகம்
அற்ற நேர்மையான
நேசத்திற்காய்
மிதித்து
வாழாத மதிக்கும் மனத்திற்காய்
பிரிவு இல்லாத இணைந்த சமாதானம்
தேவை
மனதில் அழுக்கை நீக்க அன்பு
பெருகும்
பிறப்பால்
நாம் மனிதர்கள் தேவைகள் வேறு
வேறுபாடுகளை
அறிதலும் புரிதலும் தேவை
வேறுபாடுகளை
மதிக்கின்ற மனமே சமாதானம்
சமாதான அறிவு வீட்டில்
ஆரம்பிக்க வேண்டும்
வாழும் சூழலே மனித
பண்பை தீர்மானிக்கும்
வீட்டில் சண்டையை
தவிர்ப்பது சமாதான முதல் வழி
வீட்டில் சமாதானம்
இருப்பின் வெளியிலும் தொடரும்
உறவுக்குள்
சமாதானம் உணர்வுகளின் புரிதல்
உணர்வுகளின்
புரிதல் உள்ளங்களை இணைக்கும்
உள்ளங்கள்
இணைந்த பின் உறவுக்குள் சந்தோசம்
உறவுக்குள்
சமாதானம் உலக சமாதான ஆரம்பம்
வீட்டை தாண்டி வர
துணை வந்த உறவு நட்பு
உதிரம் பகிராத பாசம் பகிர்ந்த புதிய உணர்வு
வீட்டை தாண்டியும் தொடரும் அன்பும் காவலும்
நட்புக்குள்
சாமாதானமே உலக சமாதான வழி
மனங்களில்
சமாதானம் விதைக்க பட்டால்
வீட்டில்
சமாதானம் உறவினை இணைக்கும்
நட்புக்கள்
சமாதானம் நாட்டிற்குள் விடுதலை
நாட்டின்
சமாதானம் உலக சமாதான சந்தோசம்
By Prasanth Satkunanathan
No comments:
Post a Comment