Friday, 26 July 2013

இருட்டில் கூட இமை திறந்து பார்த்தால் தான் 
இருள் வானில் நிலவும் நட்சத்திரமும் அழகு 
விடியும் வரை விழி மூடி ரசிப்பது காதலி அழகை 
அருகில் இருந்தாலும் சரி கனவில் வந்தாலும் சரி 


Monday, 22 July 2013

பேச்சில் வித்தை காட்டி  செயலில் ஊனமான
நம் கூட இருக்கும் மனிதர்கள் வெறும் பாரம்
நடு  தொண்டையில் சிக்கிய மீன் முள் போல்

துப்பினாலும் விழுங்கினாலும் வலி இருக்கும்

Sunday, 21 July 2013

பல சந்தர்பங்களில்
தெரிந்தோ தெரியமலோ
எமது வெற்றிகளிலும்  சந்தோசங்களிலும்
இன்னொருவர் தோற்கிறார், வேதனை அடைகிறார்
இங்கு யார் நல்லவர் யார்  கேட்டவர்

புரிந்தும் புரியாமலும் நகர்கிறது வாழ்க்கை


Thursday, 18 July 2013

குழந்தை எழுந்து நடந்த முதல் நிமிடம் 
பெற்றவருக்கு நம்பிக்கை பிள்ளை மீது 

முதன்  முதலில் காதல் சொன்ன நிமிடம் 
காதலரின் நம்பிக்கை பிரியாத வரம் என்று 

மனிதர் அறிந்த உண்மை புரிகின்ற நிமிடம் 
சுவாசித்த நம்பிக்கை இறுதி மூச்சோடு சரி 


Tuesday, 16 July 2013

ஆசை துறந்தால் சாமியாக முடியாது 
ஆசையை துறத்தல் என்பது உன் ஆசை 
யாதார்த்த வாழ்க்கை வாழ இயலாமால் 
ஒதுங்கி நின்று போதிப்பதல்ல போதனை
இயல்பாய் இணைந்து ஒன்றாய் பயணித்து 
அனுபவம் சொன்னால் ஆசை துறக்கலாம் 


Monday, 15 July 2013

மறு ஜென்மம் அதை நான் விரும்பவில்லை 
பிரிக்க முடியா  நம் காதலை அது பிரித்துவிடும் 
இறப்பு உடலுக்கு விடுதலை காதல் தொடரும் 
ஆசை துறந்த இறைவா காதலை பிரிக்காதே 


Sunday, 14 July 2013

பிறரில் சிறு முயற்சி கண்டாலும்
நம்பிக்கை கொடுக்க மறவாதீர்கள்
சிறு முயற்சி அகல் விளக்கு போல்
ஓராயிரம் விளக்குகள் ஓளி வீசலாம்

சிறு நம்பிக்கை சிகரம் தொடும் உயர்ச்சி


Saturday, 13 July 2013

உடலால் ஊனமானது கடவுள் எழுதிய தீர்ப்பு
மனம் ஊனமானால் நிச்சியம் விதி வெல்லும்
உணர்வுகள் உறுப்பானதால் விதி தோற்றது  
நீ மனதில் எழுதிய தீர்ப்பு உனது புதிய பாதை

Friday, 12 July 2013

அழுதழுது கண்களில் ஈரம் இல்லை 
இன்னும் இதயம் அழுகிறது நீ அறியாய் 
அன்பிற்காய் போராடுபவன் முட்டாள் 
நீ அன்பிற்காய் காத்திருக்கும் நாள் வரை 

Thursday, 11 July 2013

நம் நான்கு கரங்களால் நாம் இட்ட சிறையில் 
இதயங்கள் முத்தமிடும் இடைவெளிதான் 
நாணத்தால் நிலவு முகிலை தூது அழைத்து 
தன் முகம் மூடி இன்னும் இருளை கூட்டுகிறது 
நமக்கோ இந்த நொடி ஆயுள் முடிந்தாலும் ஆனந்தம் 
இறுதி வரை ஆயுள் கைதியானாலும் பேரின்பம் 


அளவு கடந்த அறிவும் 
ஆழமான கடவுள் பக்தியும் 
சில சமயங்களில் 
யதார்த்தமான வாழ்க்கையை 
ரசிக்க முடியாமால் 
தெளிவாக பேசி 
குழப்பத்தில் வாழ்வார்கள்! 


Tuesday, 9 July 2013

ஒற்றுமைகளை கண்டு காதல் பிறந்தாலும்
வேற்றுமைகளை மதித்தால் ஆயுள் வரை
புரியாத காதல் உடலால் இணைந்திருக்கும்
புரிந்த  காதல்  உணர்வால் தொடந்திருக்கும் 

Sunday, 7 July 2013

AMMA

தாயின் மடியில்  தொலைத்த தூக்கம் 
தாயின் சேலையில் கலையாத நிம்மதி 
சேய் அறிய முடியா தாய் மறந்த தூக்கம் 
அழிக்க முடியாத அன்பின்  அடையாளம்