Thursday, 30 June 2016

#காதல்_களம் 

மறையாத வானவில் 
வண்ணம் மாறாத மங்கை 
தித்திக்கும் அவள் பார்வை 
திகட்டவில்லை ஐம்புலன்களையும் 

மழை கூட மௌனித்து பொழிகிறது 
மாது அவள் மழையை ரசிக்கும் வேளை 
இயற்கையை  மயக்கும் காதல்  ராணி 
இளமையை மாற்ற , மாது இவள் மது 

மழை துளிகளின் போராட்டம் 
மண்ணில் முடிய முன்
உன் மனம் தொட்டு விட 
மழைக்கால காதல் களம் 

#BySPrasanth

Wednesday, 29 June 2016

மொழிகள் மதி மயங்கி
மவுனித்து ரசித்தன 
விழி பேசும் புது மொழியை

விழி சொன்ன காதல் பாடம் 
இதயம் விரும்பி கற்ற பாடம் 
இதயம் துடிக்கும் வரை மறவாது

விழியால் மிரட்டும் அழகை ரசிக்க 
வேணுமென்றே குட்டி குறும்புகள் 
செல்ல சண்டை சுகமான முடிவு

கண்கள் திறக்க காதல் பிறக்கும்
விழிகள் மயங்க காமம் தவிக்கும் 
கண் லீலைகள் காதல் வேதங்கள்

Saturday, 25 June 2016

சந்தோஷ_வரம்

#சந்தோஷ_வரம்


என் இதயத்துடிப்பின் ஓசை என்னவள் ரசிக்கும் இசை நான் பேசா மவுனத்தையும் மொழி பெயர்க்கும் காதல் கணினி முப்பொழுதும் அவள் நினைவுக்குள் முற்றுப் பெறாதது என் நினைவுகள் வேண்டாமலே விரும்பி சந்தோச வரம் அளிக்கும் காதல் பக்தனின் கடவுள் நீ



#BySprasanth

Wednesday, 22 June 2016

காதல் போராளி

காதல் போராளி 

தாங்க முடியாத வலியை யார் தந்தாலும் 
நெருப்பை அணைக்கும் நீராய் நீ இருந்தால் 
கவலைகள் கரையும் சுமைகளும் சுகமாகும் 


தவறுகளை மன்னிப்பதில் தாயுமானவள் 
துன்பமே நடுங்கும் இவள் பாச உச்சம் கண்டு 
என்னை   நம்பும் எனை காக்கும் காதல் போராளி 


BySprasanth

Thursday, 16 June 2016

தெய்வீக தரிசனம்

தெய்வீக தரிசனம்

உன்னை உற்று பார்க்கும் நேரம் உறைந்து போகும் என் கண்கள் நிஜத்தை கண்ட கண்கள் கனவை துறந்தது கற்பனை கசந்தது வாடாத மலர் இனம் திகட்டாத தேன் வரம் வண்டுகள் ருசிக்காத பூ இவள் பருகாமல் பார்த்தாலே சுவை தரும் உன் சுவாசம் கலந்த காற்றுக்கும் இதயம் துடிக்கும் புயலும் உன்னை கடக்க பூக்களாய் மாறும் வற்றாத பசுமை வசந்தத்தின் உச்சம் மாறாது காலநிலை மாது உன் புன்னகையால் ஆனந்த ஊற்று அழகின் எல்லை கடவுளும் விரும்பும் கருணை பார்வையின் தரிசனம் பக்தனின் விமோட்சனம் ஆத்திகனும் நம்பும் தெய்வீக தரிசனம்..

Prasanth


Tuesday, 14 June 2016

சாதல்_இறந்தது

#சாதல்_இறந்தது சுடும் வெயிலிலும்வீசும் குளிர் காற்று துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றும் மருந்து கடும் குளிரிலும் சூடேற்றி சுகம் தரும் மேனி நாணத்தால் நீ நனைய வேர்வையால் நான் குளிக்க கண்களால் கட்டி அணைத்தாய் காதல் பிறந்தது கைகளால் கட்டி அணைத்தாய் சாதல் இறந்தது எழுத்தில் எழுதி தாளில் பதிந்த கவிதையல்ல நீ உள்ளத்தில் எழுதி உயிரில் கலந்த கவிதை #பிரசாந்



Sunday, 12 June 2016

பிரியா​​_பிரியம்

பிரியா​​_பிரியம் 

இடைவெளி இல்லாத நெருக்கம் 
இதயங்கள் முத்தமிடும் தூரம் 

விழிகளுக்குள் இடைவெளி இல்லை 
பார்வையெல்லாம் நாமாக மட்டும் 

சுவாசத்தை சிறைபிடித்து சுவாசிக்கிறோம்
 காதலின் தண்டனையாக ஆயுள் வரை