#காதல்_விதி
வானின் நிலா வந்து உன்னை பார்க்கும்
உன்னை பார்த்த பின் அதன் கர்வம் அடங்கும்
உன் எழில் கண்டு நிலா கூறிய கவிதை
நீ நடமாடும் தேயாத பூமி நிலா என்று
உன் அழகிய கனவுகள் கலையாது
கண் விழித்து காவல் காக்க ஆசை
இன்னும் கொஞ்ச ஆசை அது
உன் கனவெல்லாம் நானாக ஆசை
உனக்காக மட்டும் பூக்கள் மலர ஆசை
கூவும் குயில் கூட உனக்காக இசைக்க ஆசை
இளமையும் இருளும் விலகாது இணைக்க
இதயங்கள் இடம் மாறி துடிக்கும் இன்ப விழா
அலை கடல் , முகில் மேகம் பிரிந்தாலும்
ஓயாது சுழலும் பூமி ஓய மறந்தாலும்
இணைந்த காதல் பிரியாது மறவாது வாழும்
இயற்கை விதியை வெல்லும் காதல் விதி
#BySprasanth


No comments:
Post a Comment