#காதலால்_சுவாசிப்போம்
உன் அணைப்பிற்குள்
உயிர் வரை வியர்க்கிறது
இருந்தாலும் இனிக்கிறது
இதயம் வரை நனைகிறது
என்னோடு நீ இருந்தால்
இறந்தாலும் வரம்
என்னை நீங்கி நீ சென்றால்
வாழ்ந்தாலும் சாபம்
மனம் விட்டு சிரிக்கின்றோம்
மனதார வாழுகின்றோம்
ஓயலாம் காற்று ஓயாது காதல்
காதலால் சுவாசிப்போம்
என்னை சற்றே நீ பிரிந்தாலும்
பொய் உடல் இருக்கும்
மெய் உயிர் இருக்காது
உயிர் மெய் காதல் உணர்வு நீ
BySPrasanth


No comments:
Post a Comment