Saturday, 2 June 2012

நட்பின் நாடகம்


நட்பின் நாடகம்

அழகாய் வந்த நட்பு வானவில் போல
அன்பாய் சிரித்து  ஆறுதல் பேசியது -இன்று
நம் உறவு இடியுடன் கூடிய மழை போல
இதயம் துடித்து கண்ணீர் மழை

முக பார்க்கும்  கண்ணாடி போல
அழுதால் அழுதாய் சிரித்தால் சிரித்தாய் -இன்று
பார்வை இருந்தும் குருடனை போல
அழுவது தெரிந்தும் அலட்டாமல் விலகுறாய்

ஊக்கம் கொடுத்தாய் உடன் பிறந்தவர் போல
மனம் விட்டு ரசித்தாய் மழையை போல் -இன்று
பனி போர் புரிகிறாய் சகுனியை போல
பிறர் எனை பாராட்டுவது பிடிக்காமல்

தூரத்தில் உள்ள சூரியன் போல
ஒளி தந்தாய் வலி தரவில்லை -இன்று
நெருங்கி வந்த சூரியன் போல
எரிந்து நீறானது நீண்ட நாள் நட்பு

கடும் தாகத்தின் பின் அருந்தும் நீர் போல
நீ தந்த நட்பின் சுகம் நான் உணர்ந்தேன் -இன்று
உருகும் மெழுகு திரி போல
உருகிறேன்  நீ  நினைவில் வரும் போதெல்லாம்

வழி தந்து விழி பிடுங்கும் போலியான நட்பு
அன்பு தந்து பின் நெஞ்சில் அம்பு பாச்சும் நட்பு
புரிந்து வந்து பின் இறுதியில் பிரிந்து செல்லும்  நட்பு
நட்பின் வளர்ச்சி பிடிக்காமல் நாடகம் போடும் நட்பு
ஆரம்பத்தில் எனை பிடிக்க காரணமாய் இருந்த காரணங்கள் -இன்று
எனை வெறுத்து விலக உனக்கு காரணமாகியது
எனை பிடிக்காமல் பிடித்தது போல் பேசும்
உன் நாடக நட்பு எனக்கு தேவை இல்லை

Friday, 1 June 2012

இசை தெய்வம் ♫

இசை தெய்வம்
தாயின் தாலாட்டு நினைவில் இல்லை
நினைவு தெரிந்து நான் கேட்கும் தாலாட்டு
தாய்க்கு ஈடாக எனை தாலாட்டும் இசை
இன்றும் கிடைக்கும் தாயின் அரவணைப்பு

இதயங்கள் வலித்த போதெல்லாம்
இளையராஜாவின் இசையை கேட்டது
இலவச மருத்துவம் நீ தந்த அதிசயம்
இதய துடிப்பாய் எல்லோரிலும் நீ

இறைவனை தேடல் எல்லோர்க்கும் உண்டு
கண் திறந்து தேடினேன் காணவில்லை
கண் மூடி தேடினேன் உன் இசையோடு
இசையும் இறைவனும் உணரத்தான் முடியும்

மழலைக்கு உன் இசை ஒரு தாய்
இளையவருக்கு உன் இசை ஒரு காதல்
முதியவருக்கு உன் இசை ஒரு கடவுள்
வாழும் வரை உன் இசை என் சுவாச காற்று


இசை தெய்வம் இளையராஜாவிற்கு எனது
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இறைவன் அவரிற்கு நல் உடல் உள ஆரோக்கியம் கொடுத்து
அவரின் தெய்வீக இசை பணி தொடர
எனது வாழ்த்துக்கள்

Thursday, 31 May 2012

அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்

அனைத்து அன்னைய‌ர்க‌ளுக்கும் என் தாய்க்கும்
என் ம‌ன‌ம் நிறைந்த‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்

Tuesday, 29 May 2012


*கடவுளின் தேடல் *

கடவுள் என்பது நம்பிக்கை
கடவள் என்பது தூய்மை
கடவுள் என்பது தியனாம்
கடவுள் என்பது கருணை
கடவுள் என்பது உதவி
கடவுள் என்பது அன்பு
கடவுள் என்பது காதல்
கடவுள் என்பது ஜெயம்
கடவுள் என்பது சாந்தம்
இவைகள் மனித உணர்வுகள்
உன்னால் உணர முடிந்தவை
மனிதரில் தான் தெய்வம் உண்டு
இவ் உணர்வுகள் உணர படவில்லையேல்
நீ கடவுளை தேடும் பக்தன்

Wednesday, 23 May 2012

முத்த நிமிடங்களுக்காக Embarrassed

அழகிய மாலை வேலை
அந்த கடற்கரை மணலில்
இதமாய் வீசிய குளிர்காற்று
இருமேனி இடைவெளி குறைத்தது

அவள் அவன் கரம் இறுக்க பிடித்து
உன்னை மிகவும்  பிடிக்கும் என்றால்
அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு
நீ என்றி நான் இல்லை என்றான்

முழு நிலவின் தரிசனம் முழுமையாக
அவள் கண்ணில் ஒரு ஏக்கம் கண்டான்
உடலும் உணர்வுகளும் ஒன்றான நிமிடங்களில்
இதழ்கள் இணைய இதயம் துடித்தது

அவள் தலை என் மார்பில் புதைத்தால்
அவன்  இருகரத்தால் அவள் முகம் தூக்கி
அவள் விழிகளை வினாடிகள் ரசித்தான்
இதழ்கள் இணைய இமைகள் மூடிக்கொண்டது

காந்தவிசை தோற்கும் ஒரு ஈர்பால்
இறுக்கமாய் இணைந்திருந்த இதழ்கள்
ஈர் உயிர் ஓர் உயிரான நொடி துளிகள்
இமை வழி கசிந்தது கண்ணீர் துளிகள்

சொர்க்கம் மண்ணிலா விண்ணிலா
கற்பனையில் கடந்து வந்த முத்த காட்சியே
என்னை சொர்கத்துக்கு அழைத்து சென்றது போல
காத்திருக்கிறேன் அந்த முத்த நிமிடங்களுக்காக

 போட்டி கவிதைகள்


கொடுக்கப்படும் ஒரு வார்த்தை குறைந்தது ஒரு முறை ஆவது பாவித்து
ஒரு கவிதை எழுத வேண்டும் 
 
ஊமை
உன்னை பிடித்தும் விலகும் போது 
வெறுத்தும் சேர்ந்து இருக்கும் போது
உண்மையும் உணர்வுகளும் ஊமை ஆகி
பேச முடிந்தும் மௌனம்


நிமிடமும்
வான் மழை பெய்ய முன்பும் வானவில்
பார்வைக்கு அழகாக ஒரு நிமிடம்
கண் மழை பெய்ய முன்பும் வானவில்
காதலியாக நினைவில் ஓவருநிமிடமும்


கண்
என் இதயம்
எனக்காக துடித்தாலும்
அதை நான் உணர்வது
நீ என் கண் முன்னே வரும் போது


நாணத்தில்
நொடிக்கு ஒரு தடவை
துடிக்கும் என் இமை
துடிக்க கூட மறந்தது
என்னை  பார்த்த நாணத்தில்
உன் கண் இமை துடிக்கும்
அந்த  அழகை ரசிக்க



வழி
என் கண்கள் உன் கண்களுடன் பேசியதால் தான்
என் இதயம் உன் இதயத்துடன் காதல் கொண்டது
எம் காதலுக்கு தூது விட்டது   நம் கண்கள்
நாம் இணைய வழி தந்த விழிக்கு நன்றி


நாடி
அன்பு காட்ட மட்டும் எனக்கு தெரியவில்லை
அனால் உன் அன்பு கிடைக்காமல் துடித்தேன்
துடித்தேன்  துடித்தேன்  என் நாடி துடிப்பு நிற்கும் வரை
நீ துடித்து என்னை நாடி வந்து புரிந்து கொண்டாய்
ஒரு உயிருக்காக இன்னோர் உயிர் துடிப்பது தான் அன்பு என்று


பரிசு
என் முன்பே நீ கண் மூடி போனதால்
உன் பின்பே  கல்லறை வர நினைத்தேன்
அதன் முன்பே என் கருவறை நீ வந்தாய்
அதுதான் அன்பே   நீ தந்த கடைசி காதல் பரிசு

இமைகள்
எதிரில் இருந்தும் தூரத்தில் தெரிந்த நீ
இமைகள் மூடும் போது நெருக்கமாகுறாய்
எதிரில் இருந்தும்  பிரிந்து இருப்பதாய் விட
இமைகள் மூடி இணைந்து இருப்பதே சுகம்

Saturday, 17 March 2012

 போட்டி கவிதைகள்

கொடுக்கப்படும் ஒரு வார்த்தை குறைந்தது ஒரு முறை ஆவது பாவித்து
ஒரு கவிதை எழுத வேண்டும்


நம்பிக்கை
உன் மீது பிறர் நம்பிக்கை மாறலாம்
பிறர் மீது உன் நம்பிக்கை விலகலாம்
உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லையேல்
நீ நீயாகவே வாழாமலே வாழ்க்கை முடியலாம்


இதயம்
கண்கள் சந்தித்து இதயம் காதல் கரு கொண்டது
உணர்வு
கள் கலந்து இதயம் காதலை வளர்த்தது
சந்தேக அலை அடித்து இதயம் வலி கண்டது
இறுதியில் இதயங்கள் உடைந்து கல்லறை முடிவானது
இதயம் இது  காதலின் பிறப்பிடமா?
இல்லை இது காதலின் இறப்பிடாம ?

வலி
பிறப்பின் போது தாய் கண்ட உடல்  வலி
மரணம் கண்டு எனக்கு ஜனனம் தரவே
நாம் விரும்பியும் காலம் நமை பிரிக்கும் போது
நாம் சுமகின்ற வலி சற்று அதிகமே உள வலியனதால்
இங்கு ஜனனம் ஆனா காதல் மரணம் ஆவதனால் 

  
உன்னை
என் கண்களே உன்னை வஞ்சிக்கிறேன்
அவள் என் இதயம் வரும் வரை  வழி கொடுத்து
மீண்டும் அவளை  திருப்பி அனுப்ப வழி தெரியாமல்
உன் நீலி கண்ணீர் ஆறுதல் மட்டும்  தேவை இல்லை

  
  

Tuesday, 13 March 2012


போட்டி கவிதைகள்
ஒரு சொல் தந்து
அந்த சொல் ஒரு தடவை ஆவது பாவித்து ஒரு கவிதை


கற்று
பிறந்ததும் அழுது கொண்டு வந்தாய்
மழலையில் அழுது  அடம் பிடித்தாய்
இளமையில் அழுது காதல் வளர்த்தாய்
முதுமையில் அழுது பிரார்தனை செய்தாய்
சுவாசிக்க தொடங்கி நிக்கும் வரை உனக்காக அழுத நீ
உன் இறப்பின் போது மட்டும் உனக்காக பிறர் அழ
கற்று கொடுத்து சென்றாய்

கொண்டாய்
நீதான் அடம் பிடித்து என்மேல்  அன்பு  கொண்டாய்
நான் இன்றி வாழேன் என உன்னுள் உறுதியும் கொண்டாய்
உன் அன்பால்  என் அன்பு வென்றாய், ஏன் இப்படி காதல் கொண்டாய்
உன்னை பிரிந்து வாழேன், என்னுள்   நீ நிலை கொண்டாய்
ஆதலினால் உன் இறப்பில் கூட என்னை  இணைத்து கொண்டாய்    

அருகில்
அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட
ஆரும் அற்ற தனிமையின் வேதனையே மேல்
நான் உன்வீட்டு வாசல் படியில் இல்லை
பரிதாபம் பார்த்து நீ அன்பு பிச்சை போட
புரிந்து கொள் நான் நிற்பது  உன் இதய வாசலில்
உன் இதயத்தில் இடம் தருவாய் என்ற நம்பிக்கையில்

தொடரும் நிகழ்காலம் நட்பு


தொடரும் நிகழ்காலம் நட்பு

அநாதை யாரும் இல்லை என்பதற்காய்
ஆண்டவன் அனுப்பிய அன்பின் அரவணைப்பு

வெறும் நம்பிக்கையில் மட்டும் பூத்த
நாட்கள் நகர்ந்தும் வாட நேய  மலர்

உறவுக்குள் வெளி நின்றாலும் கூட
உன்னை முதலில் புரிந்து இணைந்திருப்பது

மனிதன் பிரிவினை மறந்து வாழ
மனம் விட்டு  பேச  பிறந்த உறவு

உன்னை தொடரும் நிழல்  போல
காலம் கடந்தும் தொடரும் நிகழ்காலம்

உனக்கே உரிய தனிப்பட பெருமை
உன்னை விட என்னை அறிந்தவரில்லை

கருவறையில் தாயில்  துடங்கிய என் பயணம்
கல்லறையில் உன் கையால் முடிய விரும்புகிறேன்