Tuesday 31 December 2013

அழைக்கின்ற புது வருடம் 
அன்பு கொண்டு அணைக்கட்டும் 

புது வருடம் புது புது எண்ணங்கள் 
புது சக்தி கொண்டு புது வாழ்வு காண்போம் 

இதழ்களில் மொழிகள் பிறவாது 
இதயத்தில் பிறந்து இன்பங்கள் பேசட்டும் 

புன்னகை முகம் கொண்டு 
புது புது முகங்கள் வரவாகட்டும் 

நம்பிக்கை அம்பு எய்து 
இமயம் வரை சென்று இலட்ச்சிய கனி பறிக்கட்டும் 

கருணையும் காதலும் உன்னில் பிறக்க 
கலியுகம் விரண்டோட மதி கொண்டு விதி வெல்

வேற்றுமை கடந்து வெளியே வா 
சொந்தங்கள் இணையட்டும் சுகந்தங்கள் பாடட்டும் 

இயற்கையின் படைப்பில் நாம் மனிதர் 
பிரிவினை கழித்து இணைப்பினை கூட்டு 

வருக வருக புது வருடமே 
வசந்தங்கள் கொண்டு நம் வாசல் வா 

மலர்ந்துட்ட புது வருடம் சிறக்க 
மனிதர் நாம் அன்பால் இணைந்திருப்போம்

By HeartBeat_Santh


2 comments:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தனபாலன் நன்றி

    உங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete