Friday, 28 June 2013


எழுத்தில் படித்த காதலின் விளக்கம் 
நிஜத்தில் புரிந்தது உன்னை கண்டதால் 
உன் நிழலிடம் ஓய்வெடுக்க கேட்கின்றேன் 
அதற்கு பதில் உன் கூடவே நான் தொடர 
ஓயாது  ஓடும் முகில் போல உன் நினைவுகள் 
என்னை சுற்றி தொடர்கிறது முடிவில்லாமல்

Thursday, 27 June 2013

இன்பம் துன்பம் இரண்டிலும்
இதய துடிப்பு ஓயாது தான் துடிக்கும்
நம் காதல் நிற்காத இதய துடிப்பாய்
கவலைகள் காதலை காயம் செய்யாது
இதயத்தில் காதலை கடவுளாய் வைத்து

பக்தனாய் வணங்கு சாமியை மாற்றாது

Wednesday, 26 June 2013

பெண்மையின் உயிர் போராட்டம் தாய்மைக்காக 
இடுப்பு வலியால் இறக்கின்ற நிலை சென்றாலும் 
இதய வலியமையால் பிள்ளை சுவாசிக்கும் வரை 
மூச்சை அடக்கி சுவாசிக்க மறந்து போராடி வென்று 
சேயின் வருகையால் வலிகள் கரைந்து அன்பானது 
By♥Heartbeat-Santh♥


Sunday, 23 June 2013

அழகு பெரிதில்லை என்பவர்கள் எல்லாம் 
கண்ணாடி முன் நிற்பதில்லையா என்ன ?
அழகு என்பதை யாரும் வெறுப்பதில்லை 
அழகை தகுதியாய்  பார்ப்பதே அசிங்கம் 



Friday, 21 June 2013

தாய் இட்ட முதல் முத்தம் 
நீ அறிய சாத்தியம் இல்லை 
ஆனாலும் உன் தாய் அறிவாள் 
நேர் மாறாக உன் முதல் காதல் 
நீ மறக்க சாத்தியமே  இல்லை 
மறுத்தால் உனக்கு நீ சொன்ன பொய் 

Wednesday, 19 June 2013

மண்ணில் விழுகின்ற மழைதுளிகள் 
மறைவதும் மரணிப்பதும் இயற்கை செழிக்க 
மனிதன் விழுகின்ற தருணங்கள்

மயக்கங்கள் தெளிந்து தனை அறிந்து தான் ஜெயிக்க

Tuesday, 18 June 2013

ஒரு துளி உதிரம் கலந்து உயிர் கொள்ளும் நோய் 
நல் உறுப்புகளை கூட  செயல் இழக்க செய்வது போல் 
நேர்மையற்ற மனிதர்கள் வைக்கும் விஷ  பரீட்ச்சையில் 
இன்று நல்ல மனிதர்கள் கூட நிலைக்க முடியவில்லை

Monday, 17 June 2013

புறக் கண் இல்லாது அகக் கண் இருந்திருந்தால்
  
இலகுவில் புரிந்து இருக்கும் அன்பிற்கான ஏக்கம்

மொழிகள் மவுனித்து இதயங்கள் பேசி இருந்தால்

உணர்வுகள் வலிக்காமல் உறவுகள் தொடந்திருக்கும்




Monday, 10 June 2013

எல்லோருக்கும் உன்னை பிடிக்க முடியாது -அது 
இரவிலும் சூரியனை காண ஏங்குவது போல் 
பிறர் உன்னை விரும்புகிறார் என நினைத்து ஏமாறுவது 
மழை முகில் கூடும் போதெல்லாம் மழை வராதது போல் 

Thursday, 6 June 2013

என் காதல் 
இறந்து பின்தான் என் காதல் புரியும் என்றால் 
இதயத்தை கல்லாக்கி கல்லறை செல்வேன் 
காதல் சண்டையில் இரு இதயங்கள் சாகமால் 
என் காதல் உன்னில் பிறக்க நான் இறப்பேன்

Wednesday, 5 June 2013

ஒரு நாள் மலர்ந்து ஒரு நாள் மடியும் மலரே
அது தான் கொண்டாட படுவதை தான் விரும்பும் 
பறித்தாலும் பறிக்கா விட்டாலும் ஒரு நாள் வாழ்க்கை 
மலர் மடிய போகிறோமே என ஏங்கி காத்திருப்பதில்லை 
மனிதனாய் பிறந்த நாமும் இருக்கும் வரை வாழணும் 
நொடிக்கு நொடி இறக்கதே என்றோ வரும் நாளிற்காய் 

Tuesday, 4 June 2013

தரைக்கும் அலைக்குமான ஒரு சில நொடி பிரிவில் 
ஊடலின் மவுனம் உன் உள்ளத்தை தாக்குவது  போல் 
கரையை அலை முத்தமிடும் அந்த  காதல் நிமிடங்கள் 
கூடலின் இன்பம் உனக்கு காதலை கற்பிக்கும் தருணம் 


Monday, 3 June 2013

மருத்தவம் வளர்ந்து வாழும் காலம் உயர்ந்தது 
மனதை கட்டுபடுத்த  மட்டும் மருந்து இல்லை 
உறுப்புக்கள்  ஒன்றே அதில் ஓடும் குருதி ஒன்றே 
மன நிலை மட்டும் மனிதனுக்கு மனிதன் வேறு 
இறை வழி ஒன்றில் தான் மனங்கள் ஒரு வலி செல்லும் 
மனிதின் கட்டுபாடு படைத்தவன் கையில் மருந்தில் அல்ல 
மருத்தவம் கடவுள் அவதாரம் எடுக்க முயன்று தோற்கின்ற இடம்