தமிழீழ விடுதலைக்காக தம் உயிர்களை ஈகம் செய்த அணைத்து உன்னத ஆத்மாக்களை நானும் நினைவு கூறுகிறேன்
விடுதலை தாகம் தீரவில்லை
விழிகளில் ஈரம் காயவில்லை
உயிர்களை கொடுத்தோம்
உதிரத்தை வடித்தோம்
உறவுகள் பிரிந்தோம்
உலகத்தை வெறுத்தோம் - இன்னும்
விடுதலை தாகம் தீரவில்லை
விழிகளில் ஈரம் காயவில்லை
தமிழ் தாய் நிமிர
தாயகம் விடிய
நம் இனம் தலைக்க
நாம் கேட்பதில் தவறா
உலகமே பார்க்க
உயிர்களை கொண்டவன்
உண்மையே செத்த பின்
பிணம் பேசும் மனிதம்
இன்னும்
விடுதலை தாகம் தீரவில்லை
விழிகளில் ஈரம் காயவில்லை
நஞ்சுள்ளம் கொண்டவனே
நச்சு புகை கொண்டு
களம் ஆடி வெல்லாது
கொன்றழித்த கோழையடா
அதர்மம் வென்றால்
நிலைப்பதில்லை வெறியனே
தர்மம் தலை தூக்கும்
தாயகம் முடிவாகும்
இன்னும்
ஏன் கண்களில் ஈரம் தோழா !!
விடியும் ஈழம் விடி வெள்ளி காண்போம்!!
BY Heartbeat_santh
No comments:
Post a Comment