நட்பினை நேசிப்பதை விட சுவாசிக்கின்றேன்
கடலை கடந்த அலை...
மடிய மறந்த மலர்...
மழை பொழியா வானம்...
இருளை துறந்த நிலவு...
இசையில் மயங்கா இதயம்...
நீந்த முடியா மீன்...
நிஜம் காண நிழல்...
நிறம் நீங்கி வானவில்...
வேர் ஊன்றா நிலம்...
ஒலி இன்றி மொழி...
ஒளி படா உருவம்...
கதிரவன் விழியா விடியல்...
கருவறை தோன்றா கரு...
மரணத்தை வென்ற மனிதன்...
இதில் எதுவும் சாத்தியம் இல்லை
ஏதோ ஒரு இனைப்பு இவற்றுக்குள்
இதே போல் நட்பும் அதன் தாக்கம் இன்றி
நீ இல்லை நான் இல்லை யாரும் இல்லை
நட்பு நாம் சுவாசிக்கும் மூச்சு காற்று போல
மூச்சு இருக்கும் வரை உயிர் இருக்கும்
உயிர் உள்ள வரை நட்பும் இருக்கும்
No comments:
Post a Comment