Tuesday 13 March 2012

தாயக கனவுகளுடன்







தீராத தாய கனவுகளுடன்
உதிரம் சொட்ட சொட்ட
உயிர் மூச்சு விடும் தருணத்திலும்
உங்களின் தாகம் தமிழீலதாயகம் சொன்னவரே


உங்கள் இளமை சுகம் திறந்து
ஊண் உறக்கம் மறந்து
கொட்டும் மழையிலும் சுடும் வெய்யிலும்
நம் நல்வாழ்விற்காய் உன் வாழ்வை துறந்தவரே

தமிழ் இனம் மொழி சமய உரிமைக்காய்
தாய் மண்ணின் விடிவுக்காய் எம்மை காத்தாய்
எமை அழிக்க வந்தவனை நீ அழித்தாய்
நாம் கை தொழும் தெய்வங்கள் மாவீரரே


நீ போராட்டத்தில் இனைந்த வேளையில்
உன் தாய் மார்பு அடித்து அழுதாள்
நீ தாய் மண் முத்தமிட்ட தருணத்தில்
உன் தாய் மாவிரர் உரையில் கருவாய் அமைந்தவரே

உயிர் கொடுப்பான் தோழன் என்ற
உண்மையான் உணர்வு உருவாகியது களங்களில்
பாசத்திற்கு உரியவர்களால் பகைவர்களால் அழிவது கண்டு
உடலை ஆயுதமாக்கி கரும்பகை காண கரிய நிறம் கொண்டவரே


உங்கள் உணர்வுகளும் வாழ்க்கையும்
உன் உறவுகள் அறிய நீ விரும்பவில்லை
உங்கள் முகத்தில் உள்ள சிரிப்பும் சினப்பில்லாத பேச்சும்
எங்களை சந்தோசப்படுத்தி எங்களின் இரக்கத்தை எதிர் பாரதவரே

உங்களின் கள வீர சாதனைகள்
உலக சாதனை பட்டியலில் இடம் பெறவில்லை
மாறாக உலக நாடுகளே உங்களை அழித்திட சதி போட்டது
துரோகிகளின் நச்சு வாயுவால் உங்களை உயிரோடு கருக்கினரே


மாவிரரே உங்களின் மனித நேய போராட்டம்
தாயை கூட கூட்டிக் கொடுக்கும் எம்மவர் துரோகத்தாலும்
உலக நாடுக்ள் கூடி உங்கள் கூட்டை கலைத்ததாலும்
உணர்வுகள் உணரப்படாமல் வெறும் உடல்களை பொசுக்கினரே

கார்த்திகை மாதம் கார்த்திகை பூ
செவிகளில் தாய கீதம், கண்களில் நீர், கைகளில் மாலை
கைகளில் தீபங்கள் உயிர் உருகும் தருணம் இது
உணர்வுக்களுடன் உன் உறவுகள் உனை கான வருகின்றோம்


கல்லறை வந்த எங்கள் கண்களில் ஏமாற்றம்
இதயம் இல்லாதவன் இதய கோவிலையும் சிதைத்துட்டான்
மதி கெட்டவரே எங்கள் உதிரத்தில் கலந்து உயிரானவரை
இறுதி தமிழன் இப் பூமி இருக்கும் வரை நினைக்கப்படும்
தமிழரின் தாகம் தமீழிழ தாயகம்

No comments:

Post a Comment