Tuesday, 13 March 2012

~~~காதலர் தினம்~~~

~~~காதலர் தினம்~~~

~~~காதலர் தினம்~~~




கண் காதலை தேட‌
வாய் மொழி காதல் சொல்ல‌
இதயம் காதலை உள் வைக்க‌

தாயில் தொடங்கும் அன்பு
உறவகளுக்கு ஏற்றால் போல்
பெயர்களின் மாற்றம் மட்டுமே

இள‌மையின் காத‌ல்
ப‌ட்டாம் பூச்சி வாழ்க்கை போன்ற‌து
சிற‌க‌டித்து வாழும் ஒரு சிறிய‌ கால‌ம்

இசையில் உருகுகின்றேன்
இயற்கையை ரசிக்கின்றேன்
ந‌ட்பினை சுவாசிக்கின்றேன்

காத‌ல் உன்னுள் உள்ள‌ உண‌ர்வு
ப‌கிரும் இட‌ங்க‌ள் ம‌ட்டுமே வெவ்வேறு
நீ தின‌ம் தின‌ம் காத‌ல் செய்கிறாய்

காதல் இல்லை என்பவர்
காதல் இல்லாமல் புவி வாழ்வது
உயிர் இன்றி உடல் வாழ்வது போல்

இய‌ற்கை த‌ந்த‌ இல‌வ‌ச‌ ப‌ரிசு காத‌ல்
உண்மையான் ச‌ந்தோச‌ம் அதில் தான் உண்டு
கெட்ட‌தாய் இருந்தாலும் காத‌லுட‌ன் இரு

ம‌ன‌தில் காத‌ல் வ‌ந்தால்
ம‌ன‌ம் விட்டு சொல்
காத‌ல் ஒன்றும் த‌வ‌று இல்லை

நீயும் நானும் காத‌ல் இன்றி இங்கு இல்லை
ந‌ம் காதலை கொண்டாட‌ ஒரு காத‌ல‌ர் தின்ம் போதாது
காத‌லை உண‌ர‌மால் உள்ளவர் புரிந்து கொள்ள ஒரு நாள்

அனைவ‌ருக்கும் என் இத‌ய‌ம் நிறைந்த
காத‌லர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்

No comments:

Post a Comment