அதி காலை தந்த சுகம்
ஊர் நடுவில் அமைந்த கோவில்
எமை எல்லாம் காத்து நிற்கின்ற விநாயகர்
உற்சாகம் தருகின்ற ஆலய மணி ஓசை
கொண்டை போட்ட எங்கள் வீட்டு ஆண்மகன்
கூரைகளின் மேல் சேவள் அறை கூவள் விடுகிறான்
விடிந்தது காலை தொடங்கட்டும் வேலை
விடிகின்றது காலை ஆனாலும்
என் விழிகள் மட்டும் விழிக்க மறுக்கிறது
அதிகாலையில் தூங்கும் சுகத்திற்கு ஈடாக ஏதுண்டு
முதலில் விழித்தெழுகின்ற என் அம்மா
அடுப்படியில் தாளம் போடுகிறார் அந்த சத்ததில்
அப்பா எழும்பி சுதி சேராமால் கத்துகிறார்
அப்பாவின் அதிகாலை புலம்பல்
பக்கத்து வீட்டுல விளக்கு எரியுது
இவங்கள் இன்னும் எழும்பல படிக்கிறதிற்கு
தீடீர் என்று பின் முதுகில் ஒரு இடி
துள்ளி எழுந்திருந்தேன் கொலை வெறியோடு
அது என் அம்மா அன்பான அதிகாலை வில்லி
தலை விரி கோலாமாக தலையை சொறிஞ்சபடி
வீட்டு முற்றத்தை பெருக்கி கொண்டிக்கும் அக்கா
பேய் கூட பார்த்தாலே பயந்தோடும் ஒரு தோற்றம் அது
அதிகாலை விழிப்பது கொடுமை தான்
ஆனாலும் காலையில் படிப்பது ஒரு சுகம் தான்
ஒரு தன்னம்பிக்கையுடன் இன்று பாடசாலை செல்லலாம்
சாதரண குடும்பத்து தலைவன் என் அப்பா
அம்மாவை சீக்கிரம் தோட்டத்திற்கு வர சொல்லிவிட்டு
மண்வெட்டியுடன் அவர் தோட்டம் செல்கிறார்
நான் பாடசாலை செல்ல ஆயுத்தம் ஆகின்றேன்
அடுப்படியில் இருந்து வரும் முட்டை பொரியலின் வாசனை மூக்கை நுளைக்கிறது இன்னிக்கு புட்டு சாப்பாடு
அம்மா போய்ட்டு வாறேன் என்று சொல்லிட்டு
எனது துவிச்சக்கர வண்டி நோக்கி வருகிறேன்
அக்கா ஒரு பள்ளி ஆசிரியை எனக்கு முன்னே போய்விட்டார்
பாடசாலக்கு செல்லும் சாலையில்
வழியில் கண்ணில் பட்ட காலை காட்சிகள்
மனதிற்கு இதமாக இருந்தது
உதயவண் உலா வர ஆரம்பம்
தூக்கம் கலைகின்றன மலர்கள்
மரகதம் தேடும் வண்ணத்து பூச்சிகள்
எனை போல மற்றவர்களும்
வெள்ளை ஆடையில் எறும்பின் வேகத்தோடு
ஒரு திசையை நோக்கி விரைவது தனி அழகு
அதிகாலை குளிர் சேர்ந்த காற்று
மேனி தழுவி செல்லும் போது
மனதினில் ஒரு உற்சாகம் பிறக்கிறது
விநாயாகர் கோவிலை கடக்கும் போது
ஒரு கையால் கும்பிட்டு செல்வது
சாமி கோவிக்காத என்று சொல்லி செல்வேன்
பெரிய வயல் வெளி,இரு பக்கமாக பனை மர காணிகள்
ஒரு பக்கமாக வீடுகள், இன்னொரு பக்கமாக கோவில்
அதில் ஒரு பக்கமாக எங்கள் ஊர் பெரிய பாடசாலை
கதிரவன் தலைக்கு மேலே வந்து விட்டான்
இறுதியாக பாடசாலை வந்தடைந்தேன்
அதி காலை தந்த சுகத்தை விட்டு விலக மனம் இல்லாமல்...

No comments:
Post a Comment