என் பிரிவிலும் தொடரும் நட்பு
உறவுககளின் தொடக்கம் அம்மா நீ ஆனாய்
தாய்மை என்பதை முதல் உணர்ந்தாய்
தாய்மை என்பதை முதல் உணர்ந்தாய்
என் உணர்வுகளில் நான் படைத்த உறவு நட்பு
ஆகவே நான் கூட தாய்மை உணர்கிறேன்
தாயே உன் கருவறையில் நான் வாழ்ந்தவரை
உன் மூச்சு காற்றில் நான் சுவாசித்தேன்
இதயவறையில் வைத்த என் நட்பு வாழ்கிறது
என் மூச்சு காற்றும் நிக்கும் வரை
அம்மா என்ற உறவு முதல் அனைத்து
உறவுகளையும் காட்டியவள் நீ
நட்பு என்ற ஒரு உறவில் நான்
அனைத்து உறவுகளையும் காண்கிறேன்
அம்மா இல்லமால் உயிர்கள் இவ் உலகம்
காண்பதற்கு சாத்தியம் இல்லை
நட்பு இல்லாமல் உயிர்கள் எவ் உலகம்
சென்றாலும் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை
அம்மா நீ கண்ட பிரசவ வேதனை கூட
நீ உன் பிள்ளை காண்பதற்கே
நீ கொண்ட அதே வேதனை காண்கிறேன்
நான் வாழ்ந்த நட்பின் பிரிவுகளில்
நண்பர்கள் பிரியலாம் அனாலும்
நான் கண்ட நட்பு என் பிரிவிலும் தொடரும்
என் உயிர் நண்பர்களலின் நினைவுகளில்
No comments:
Post a Comment