Saturday, 31 May 2014

தக்கன பிழைத்து வாழ்தலில் 
ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்து 
வாழ வேண்டிய சூழல் வரலாம் அது இயற்கை 
ஆனால் ஆறாம் அறிவு கொண்ட 
மனித இனம் மட்டுமே 
தன் இனத்தையே தான் அழித்து 
பின் தற்பெருமையும் பேசும்!! 

By HeartBeat-Santh

Monday, 26 May 2014

சுபம்

எமக்கெல்லாம் இரு இதயங்கள் 
ஒன்று எம்முள்ளே உள்ள இதயம் 
இன்னொன்று வெளியே உள்ள இதயம் இயற்கை 
உயிரோடு விளையாடாமல் 
உயிரோடு உயிராக 
உறவாடுங்கள் 
சுபம்

By HeartBeat-Santh


Saturday, 24 May 2014

மனிதனுக்கும்
காவல் காக்கும் வெருளிக்கும் 
வித்தியாசம் இல்லை 
என் சொல்லாமல் சொல்லி 
பயந்து  பறக்கின்றன
இரை தேட வந்த 
பறவை கூட்டம் 

By HeartBeat-Santh

Thursday, 22 May 2014

முற்று புள்ளி

மழையில் நனைந்தால் 
மரங்கள் துளிர்கின்றன 
மலர்கள் சிரிக்கின்றன 
மனிதன் மட்டும் தான் 
மரண பயத்தில்
குடை பிடிக்கிறான் 
ஆனந்தத்தின் 
முற்று புள்ளி 
அறிவு 

By HeartBeat-Santh


Wednesday, 21 May 2014

தியாகி

மனதாலும் உடலாலும் 
பத்து மாதம் நொந்து 
பெற்ற தாய் தெய்வம் என்றால் 
தாயையும் சேயையும் சேர்த்து 
மரணம் வரை சுமக்கின்ற 
தந்தை அன்புக்குள் அடங்காத விந்தை 
வாழ்ந்து முடிந்த பின் 
கிடைக்கும் தியாகி பட்டம் 

By Heartbeat-Santh



Saturday, 17 May 2014

நீதிக்கா நிதிக்கா

முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கி போனவரே 
முழு உலகும் நடிக்க உயிர் துடித்து இறந்தவரே 
முழுதாய் மனிதாபிமானம் செத்துவிட வில்லை 
ஒரு நாளாவது ஓராயிரம் பேர்களை நினைக்கின்றோம் 
அது கூட உங்கள் இறப்புக்கு நீதி கிடைக்க அல்ல நிதி திரட்டவே  
உங்களை கொண்டவன் ஒரு இனம் மட்டும் அல்ல 
இன வெறி பிடித்த வாழும் ஆடும் பிணங்கள் 
நீதியை கொன்றவினிடம் நீதி கிடைக்க வாய்ப்பில்லை 
இருந்தும் தொடர்கிறது உணர்வெழுச்சி 
பழிவாங்கவா இல்லை பாவ மன்னிப்பு கேட்கவா 

By HeartBeat-Santh

பரீட்சை

தேய்கின்ற நிலவை 
நிறுத்த முடியாது
முழுமதியானதும் 
சிறைபிடிக்கவும் இயலாது 
வாழ்க்கையில் வரும் 
துன்பத்தை  துரத்தவும் முடியாது 
இன்பத்தை நிறுத்தவும் இயலாது 
துன்பம் பரீட்சைக்கு படிப்பது போல 
ஒவ்வொருவரும் படிக்கும் அளவுக்கே 
பரீட்சையின் முடிவு இன்பத்தை தரும்  

By HeartBeat-Santh

Friday, 16 May 2014

அனுபவம் அறிவு

அறிவு தரும் சுகம்  
பகலில் நித்திரை கொள்வது போல 
உண்ட பின் வரும் மயக்கம் போல 
உதவாமலே உறங்கும் 

அனுபவம் தரும் சுகம் 
இரவில் வரும் நிலா தரும் கவிதை போல 
குடைக்குள் ஒதுங்காது மழையில் நனையும் சுகம் 
அனுபவம் வாழ்க்கை.. கடவுள் தந்தது 
அறிவு அழிவு.. மனிதன் கண்டது

By HeartBeat-Santh


Thursday, 15 May 2014

இரவும் அழகு.. பகலும் அழகு.. 
அது பார்ப்பவர் கண்ணில் மட்டுமல்ல 
மனங்களிலும் தங்கியுள்ளது! 
வலிகளில் தான் இன்பங்கள் பிறக்கின்றன 
பிறப்பு கூட ஒரு உதாரணம்! 
இன்பமே வாழ்வாயின் 
தாகத்தின் பின் அருந்தும் 
நீரின் இன்பத்தை உணர முடியாது!
இன்பத்தின் அளவுகோல் துன்பம்!!  

By HeartBeat-Santh

Wednesday, 14 May 2014

முயற்சி

கடலை விட்டு 
தரை ஏற நினைக்கும் 
மீனின் முயற்சி போல் தான் 
பிடிக்காதவரை மணந்து 
பிடித்தமான வாழ்க்கையை 
வாழ நினைப்பது 
முயற்சி மூச்சு நிக்கும் வரை  

By HeartBeat-Santh

Friday, 9 May 2014

தீண்டாமை

உனை தீண்டும் காற்று 
எனையும்  தீண்டும் 
தடுக்க முடியுமா 
உன்னால்! 
நீ பார்ப்பவை 
நானும் பார்க்க கூடும் 
மறைக்க முடியுமா 
உன்னால்!
தீண்டாமை 
ஒழிய சங்கம் நடத்தும் நீ 
காதல் மட்டும் தான் 
தீண்டாமையை 
ஒழிக்கும் என்பதை 
மறந்தாயோ மடந்தையே!!

By HeartBeat-Santh

Sunday, 4 May 2014

வாழ்க்கை

போராட்டம்தான்  வாழ்க்கை 
உயிரை கொல்ல அல்ல உயிரை  காப்பாற்ற !
சாதாரணம் தான் வாழ்க்கை 
ஆகவே நீங்கள் சாதாரண மனிதர்கள் 
என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்!
சாதரணம் மட்டுமே இயற்கை 
மற்றவை எல்லாம் செயற்கை! 
உண்மையான ஊனம் என்பது 
தன்னம்பிக்கை இழப்பது! 
கடவுள் மீது குற்றம் சொல்லாதீர்கள் 
கடவுள் பறிப்பதை விட 
கொடுப்பதே  அதிகம்! 
அதை கண்டு பிடிபவர்தான் அரிது 
விரும்பியோ விரும்பாமலோ 
எல்லோருக்கும் வாழ்க்கைவரம்!! 

By HeartBeat-Santh

காதல் மொழி

விழிகள் மட்டும் 
பட பட வென பேச 
பிரியும் இதழ்கள் 
பிரிய முடியாது தவிக்க 
மொழிகள் சிறைப்பட 
இரு இதயங்கள்
முதன் முறை பேசிக்கொள்ளும் 
புது மொழி தான் 
காதல் மொழி 

By HeartBeat-Santh


Saturday, 3 May 2014

இன்று நான் நாளை நீ !!

பழசுதானே
இனி வேண்டாம் என்று 
ஒரு ஓராமாய்
ஒதுக்கி விட்டாய் !
உயிர் இல்லாத 
எனக்கே இதை தாங்க முடியவில்லை! 
இந்த நாள் 
உனக்கும் வரும் வேளை
நீ என்ன செய்ய போகிறாய்!?

By HeartBeat-Santh


Friday, 2 May 2014

கவிதை

கவிதை  எண்ணத்தில் மலர்ந்து
உள்ளத்தில் இடம் பிடிக்கும் 
இதயத்தில் சூடும் வாட மலர் 
எண்ணத்திற்கும் இதயத்துக்கும் 
இடையில் சிறைப்பட்ட 
இன்பமான வலி 
காதலும் கவிதையும் அனுபவத்திற்கு 
மட்டுமே புரியும் 

by Heartbeat-Santh


Thursday, 1 May 2014

தனிமை

உன் வார்த்தைகள்
சொல்லா இல்லை முல்லா 
இரத்தம் சொட்ட வில்லைதானே 
என்று இரக்கமற்று பேசுகிறாயோ 
காயபட்டது உடல் அல்ல உள்ளமே
இதயம் இல்லாத உனக்கு 
என் இதயத்தில் ரத்தம் சிந்துவது 
தெரிய வாய்ப்பில்லை 
இனிமையின் தேடலில் 
கிடைத்ததோ தனிமை 

By HeartBeat-Santh