Tuesday, 29 April 2014

வேஷம்

ஒருவருக்கு 
எதனால் சந்தோசம் 
என அறிந்தும் 
அதை உன்னால் செய்ய முடிந்தும் 
கண்டும் காணாததும் போல 
விலகி நடந்தால் 
ஒன்றில்  நீ தனியே நடக்கிறாய் 
அல்லது 
உன் கூட நடப்பவர்கள் 
உன்னை போல 
விஷம் உள்ள வேஷக்காரர்கள் 
இனம் இனத்துடன் சேரும் 

By HeartBeat-Santh

Sunday, 27 April 2014

இசை

இசை 
இல்லமால் இருந்து இருந்தால் 
இருதயம் கூட துடிக்க 
வாய்ப்பு இல்லை 
ஏனெனில் 
இதயம் துடிப்பதும் 
ஒரு ஓசையில் தானே 

By HeartBeat-Santh


அம்மா


நாம் யாருக்கும் 
சுமையாக இருந்ததில்லை 
வேதனை கொடுத்தது இல்லை 
என்று சொன்னால் அது பொய் 
சுமையை கூட 
சுகமாய் சுமக்க முடியும் என்றால் 
கடவுளை கேட்டாலும் விடை 
அது அம்மா 

By heartbeat-Santh

Saturday, 26 April 2014

காதல்

குருதியால் இணையாது 
உறுதியால் இணைந்து உறவு 
இன்னும் சொன்னால் 
உறவுகள் தோன்றுவதற்கே 
இறைவன் தனக்கு பிடித்த ஒன்றை 
முதலில் பூமிக்கு அளித்த பரிசு 
இயல்பான இயற்கையான 
ஒரு உணர்வு காதல் 

By HeartBeat-santh


Friday, 25 April 2014

மழைக்காலம் 
நீண்ட பயணம் 
தெருவின் இரு பக்கமும் 
பெரும் மரங்கள் 
தெருவிற்கு கூரை அமைத்தது போல் 
ஒன்றை ஒன்று முத்தமிடுவது போல்
பச்சை இலை மேல் உள்ள மழைத்துளி 
பார்க்கும் போது ஏற்றப்படும் உணர்வு 
விபரிக்க முடியாத பெயரிடப்பதா 
புதிய உணர்வு 
வானொலியில் 
இளையராஜாவின்  காதல் பாடல்கள் 
ஆகா 
என்ன ஒரு இனிய பிரயாணம் 
முடிக்க விரும்பாத பயணம் 
என்றென்றும் நெஞ்சில் பசுமையாக 


நிகழ்காலம்

சில்லென்ற காற்று 
சிந்தனைக்குள் சிக்கல் இல்லை 
அருகில் இல்லாவிட்டாலும் 
அன்னையின் சேலை வாசம் 
கவலை இன்றிய தூக்கம் 
கடந்த காலம் பற்றி கவலையும் இல்லை 
எதிர்காலத்தை பற்றி கலங்கவும் இல்லை 
நிகழ்காலத்தை அனுபவிக்கிறேன் 

By heartbeat-Santh

யார் குற்றம்

எனை 
சிறைபிடிக்கும் உன் கண்கள் 
பயித்தியமாக்கும் உன் சிரிப்பு 
சூடேற்றும் உன் மூச்சு காற்று 
குளிர் ஊட்டும் உன் குணங்கள் 
உன் உணர்வுகளால்
என் உணர்வுகளை கொலைசெய்து 
உன் உடலால் 
எனக்கு தீ மூட்டுகிறாய் 
நீறானாலும் நீங்காது 
உன் நினைவுகள் 

By heartbeat-Santh


Wednesday, 23 April 2014

அநாதையான அன்பு



ஒரு சூரியன் உலகத்திற்கே 
ஒளி கொடுகிறது 
எந்தவித பேதமுமின்றி 
ஆனால் மனிதன் 
தன் அன்பினை
சுயநலமாக 
பிறந்து இறக்கும் வரை  
ஒரு சிலருக்கு மட்டுமே 
பகிர்கிறான்  
அன்பு புத்தியில் இருந்து வருகிறதா? 
இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா?
ஒரு வேளை சிறு இதயம் தானே 
என நினைத்து 
பல இதயங்களுக்கு இடம் இல்லையோ?
இல்லை  அல்லது 
அன்பு என்ற பெயரில் பல 
இதயங்களை சிறை பிடிக்க 
மனம் இல்லையோ தெரியவில்லை 
எது எப்படியோ 
இன்று அன்பு கூட அனாதையாக 
யாரும் ஆதரிப்பார் இல்லை 

By Heartbeat-Santh


Monday, 21 April 2014

இரு இதயங்கள்


#இரு_ இதயங்கள்

நீ நடமாடும் வாடா மலர் 
வந்த நொடி ஓடி போகும் வானவில் கூட 
உனை கண்ட பின் 
மறைய மறந்து விட்டது 

சூரியனுக்கு என்மேல் பொறாமை 
நீ விழித்துக்கொள்ள 
என் நினைவுகள் காரணமாவதால் 

தாயின் கருவறையில் 
இருந்து மறந்த  சுகத்தை 
எம் இதயம் இணைந்த பின் உணர்கிறேன்!
மீண்டும் இரு இதயங்கள் துடிக்கும் ஓசை 

By Prasanth Satkunanathan ( HeartBeat )

Friday, 18 April 2014

கண்ணாடி

நீ 
நிழல் காட்டும் 
உடைக்க முடிந்த 
நிழல் கண்ணாடி அல்ல

நீ 
என்பதே  நான் என்பதை 
உணர்வாலும் உண்மையாகவும் 
நிஜம் காட்டும் 
உடைக்க முடியாத 
உயிர் உள்ள கண்ணாடி. 

By HeartBeat-Santh



Thursday, 17 April 2014

சுகம் சுகமே

உன் நெஞ்சின் ஏக்கத்தை 
இதயமும் இதழ்களும் 
மறைத்தாலும் 
உன் கண்கள் சொல்ல வருவதை 
நீ சொன்னாலும் தடுக்க முடியவில்லையே 
உன் மூச்சு காற்றின் வேகம் 
என்னை தூக்கி எறியவில்லை
தொட்ட அணைக்க வா என்கிறது 
இது சுனாமியிலும் 
நீச்சலடிக்கும் சுகம் சுகமே!! :)

By HeartBeat-Santh

Sunday, 13 April 2014

ஈர் உடல் ஓர் உயிர்

கள்ளம் கபடமற்ற 
வயதில் தொடங்கிய நம் நட்பு 
இன்றும் அவ்வாறே தொடர்கிறது  
இன்றும் நமக்குள் 
ஒழிவு மறைவு இல்லை 
அந்த ஒரு உறவுக்கு முன் 
வேறொன்றும் தேவை இல்லை 
ஈர் உடல் ஓர் உயிர் என்பது 
உண்மையில் புரிந்த 
நெடு நாள் நட்புக்குள் தான் உண்டு 

By HeartBeat-Santh

Saturday, 12 April 2014

சதி சட்டம்


மனசாட்ச்சி இல்லாதவனை 
தண்டிபதர்க்கு சட்டம் உருவானதா 
இல்லை 
சட்டம் தெரிந்தவன் 
சட்டம் தெரியாத அப்பாவிகளை 
தண்டித்து 
தப்பானவர்களை தப்பிக்க வைக்கவா ?

By HeartBeat-Santh

Thursday, 10 April 2014

குழந்தை (ஆகா) ஆசை


அறிந்தும் அறியாமலும் 
அடம் பிடிக்கும் குழந்தையை 
மற்றவர்க்கு பிடிக்கும் போதும் 

மனம் விட்டு  
சிரிக்கும் மழலையை 
காண்பவர் எல்லாம் ரசிக்கும் போதும் 

எல்லோரும் நேசிக்கும் 
அந்த குழந்தை பருவத்தை 
எப்படி என்னால் கடந்து வர முடிந்தது??

By HeartBeat-Santh


Wednesday, 9 April 2014

பண மாற்றம்

நான்கு சுவற்றுக்குள் 
எனக்கும் சுவற்றுக்கும் 
தெரிந்த உண்மை 
வெளியில் சொல்வது போல 
நான் கிறுக்கன் அல்ல 
ஓவியன் என்று 
கலை உண்டு  பணம் இல்லை 
ஆகவே நான் கிறுக்கன் 
பணம் உண்டு கலை இல்லை 
கிறுக்க மட்டுமே தெரிந்தாலும்
உலகம் போற்றும் ஓவியன் 

By HeartBeat-Santh

Sunday, 6 April 2014

அச்சம் தவிர்

பெத்தவள் அணைப்பில் 
மரணம் வந்தாலும் 
மறு பரீசிலனை பண்ணும் 
மண்டி இட்டு 
புன்னகை செய்து 
பிரிக்காது பிரியாவிடை பெறும் 

By HeartBeat-Santh

Saturday, 5 April 2014

கண்ணீர்

உன் கண்ணீருக்கு காரணமானவர் 
நீ கண்ணீர் விடுவதால் கரைய போவதில்லை 
கறை பட்ட இதயத்தை கழுவவே கண்ணீர் 
கண்ணீர் மட்டும் இல்லை என்றால் 
இதயம் உடலை கிழித்தெறிந்து 
இரத்தம் சிந்தி அழுதிருக்கும் 

By HeartBeat-Santh

Friday, 4 April 2014

காதல் கோவம்


குடை கொண்டு அவள் நடந்தால் 
மழைக்கு அவள் மேல் கோவம் 
மழைக்கும் அவள் மேல் காதல் 
குடை கொண்டு தடுத்தால் 

குடை இல்லாது அவள் வந்தால் 
எனக்கு மழை மேல் கோவம் 
நான் தீண்ட முடியாத அவளை 
மழை தீண்ட முடிந்ததே என்று 

By HeartBeat-Santh

Thursday, 3 April 2014

பகல் கனவு

இறக்கை இருக்கும் போது பறக்கமால் 
சிறைக்கு வந்த பின் பறந்து செல்ல 
துடிக்கும் பறவையின் நிலையும்
சொல்ல வேண்டிய தருணத்தில்
சொல்லாமல் விட்ட காதலை 
காலம் கடந்து சொல்ல துடிக்கும் 
காதலர்கள் நிலைமையும் 
பகல் கனவு காண்பது போல் 

By HeartBeat-Santh 

Tuesday, 1 April 2014

திறமை


ஒரு சூரியன் முன் 
ஓராயிரம் மின் விளக்குகள் 
எரிந்தாலும் என்ன பயன் 
உண்மையான திறமை 
உயர்ந்த வானம் போல் 
எட்டுவதும் கடினம் 
எட்டி மிதிக்கவும் முடியாது 

By HeartBeat-Santh