Tuesday, 31 December 2013

அழைக்கின்ற புது வருடம் 
அன்பு கொண்டு அணைக்கட்டும் 

புது வருடம் புது புது எண்ணங்கள் 
புது சக்தி கொண்டு புது வாழ்வு காண்போம் 

இதழ்களில் மொழிகள் பிறவாது 
இதயத்தில் பிறந்து இன்பங்கள் பேசட்டும் 

புன்னகை முகம் கொண்டு 
புது புது முகங்கள் வரவாகட்டும் 

நம்பிக்கை அம்பு எய்து 
இமயம் வரை சென்று இலட்ச்சிய கனி பறிக்கட்டும் 

கருணையும் காதலும் உன்னில் பிறக்க 
கலியுகம் விரண்டோட மதி கொண்டு விதி வெல்

வேற்றுமை கடந்து வெளியே வா 
சொந்தங்கள் இணையட்டும் சுகந்தங்கள் பாடட்டும் 

இயற்கையின் படைப்பில் நாம் மனிதர் 
பிரிவினை கழித்து இணைப்பினை கூட்டு 

வருக வருக புது வருடமே 
வசந்தங்கள் கொண்டு நம் வாசல் வா 

மலர்ந்துட்ட புது வருடம் சிறக்க 
மனிதர் நாம் அன்பால் இணைந்திருப்போம்

By HeartBeat_Santh


Sunday, 29 December 2013

காதல் மழை 

மின்னல் கீற்றாக 
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போன காதல்! 
இடி முழக்கமாய் 
நெஞ்சை தாக்கி நிலை குலைய வைத்து நீங்க !
கடும் மழையாக 
கண்ணீர் மழை அதுவும் மண்ணை நனைத்தது !
மழை காலம் போல் காதல் காலுமும் ஒரு சுகமே !!

By Heartbeat_Santh

Thursday, 19 December 2013

காதல் வரம்

காதல் வரம் 

நீ வந்தால் நீ வந்தால் நேரம் கூடுமடி 
நீ சென்றால் நீ சென்றால் இதயம் வாடுமடி 
நீ செல்லும் நீ செல்லும் பாதை நானுமடி 
நீ பிரிந்தால் நீ பிரிந்தால் உயிரும் பிரியுமடி 
நாளை நம் காதல் கூட காவியம் ஆகுமடி 

நீ சிரிக்க சிரிக்க சிரிக்க 
நான் நொறுங்கி நொறுங்கி தவிக்க 
கண் சிமிட்ட சிமிட்ட சிமிட்ட 
நான் விழுந்து விழுந்து எழும்ப 
அன்பில் விழுகிறேன் பின்பு தவிக்கிறேன் 
அவள் மூச்சினில் நான் சுவாசித்தேன் 
ஒரு ஜென்மத்தில் நான் இருமுறை 
வாழ்கிறேன் அவள் வரத்தினால் 

நாளை நம் காதல் கூட காவியம் ஆகுமடி
By HeartBeat_Santh




Wednesday, 18 December 2013

பிரிந்தாலும் பிரியம் உண்டு

பிரிந்தாலும் பிரியம் உண்டு 

சில சமயங்களில் 
உறவுகளும் நட்புகளும் 
விலகி இருந்தால் தான் விரும்பி இருக்கும் 
சூரியன் தொலைவில் இருந்து ஒளி தந்தாள் தான் 
பூக்கள் மலரும் நெருங்கி வந்தால் மரணிக்கும் 
அதே போல் தான் சில நேரங்களில் 
உறவுகள் எட்டி இருந்தாலும் ஒட்டி இருக்கும் 

By Heartbeat_Santh


Tuesday, 17 December 2013

மன உறுதி

மன உறுதி 

பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் நிக்குமா 
ஆனால் நனையாமல் இருக்க முடியும் 
புறம் பேசும் மனிதர்களை 
நிறுத்த முயழ்வது நடக்காத காரியம் 
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்  

By HeartBeat_Santh

Monday, 16 December 2013

இனி இனிக்காது இன்பம்

இனி இனிக்காது இன்பம் 

சோகங்களை மட்டுமே ஏற்ற மனம் 
அழுது அழுது கண்ணீரும் வற்ற
அழ வைக்க வந்த சோகமும் ஏமாற
சோகங்களால் பழகிய மன நிலை 
சந்தோசத்தை ஏற்க முடியாமல்  
சக்தி இழந்து இதயம் நடுங்குகிறது 

By Heartbeat_Santh


Sunday, 15 December 2013

நினைக்க மட்டுமே

நினைக்க மட்டுமே 

மழையில் நனைந்த காலம் 
மழை நீரில் செலுத்த கட்டிய கப்பல்
மணல் வீடு கட்டிய விவேகம் 
அழுது அடம் பிடித்து உண்ணாமல்
போராடி வாங்கி பழகிய சுதந்திரம் 
நிலைக்க முடியா நினைக்க முடிந்த சுகம் 

BY Heartbeat_Santh



Saturday, 14 December 2013

விதி விலக்கான விதி

விதி விலக்கான விதி 

இனிய தோழமை இல்லாத ஏக்கம்  
நிழல் கூட துணை இல்லாத தவிப்பு 
பகல் கூட இருள் போல உணர்கிறேன் 
விரும்பாமல் தழுவும் தனிமை 
என் பிறப்பு கூட ஒரு ஊனம் தான் 
உடலால் அல்ல உணர்வுகளால்  

BY Heartbeat_Santh



Sunday, 8 December 2013

இதயம் துடிக்கும் வரை

நீ பூ போல வந்தாய் புன்னகை தந்தாய் 
நான் காற்றாகி வந்து உன்னில் கலந்தேன் 
நீயும் வந்த நேரம் இனி நிலவும் பாடும் ராகம் 
நானும் நீயும் பேச இனி இருளும் நீளும் கொஞ்சம் 

உன் கண் மொழி தானே
இன்றேன் கவிதை வரி 
உன் குரல் மொழி கூட 
இசையில் ஏழுஸ்வரம்
கண்கள் இணைத்த காதல் 
இனி எம் இமைகள் மூடும் வரை 
இரு உயரில் கலந்த உறவு 
இனி எம் இதயம் துடிக்கும் வரை

By Heartbeat_Santh

Wednesday, 27 November 2013

தமிழீழ விடுதலைக்காக தம் உயிர்களை ஈகம் செய்த அணைத்து உன்னத ஆத்மாக்களை நானும் நினைவு கூறுகிறேன் 

விடுதலை தாகம் தீரவில்லை 
விழிகளில் ஈரம் காயவில்லை 
உயிர்களை கொடுத்தோம் 
உதிரத்தை வடித்தோம் 
உறவுகள் பிரிந்தோம்
உலகத்தை வெறுத்தோம் - இன்னும் 
விடுதலை தாகம் தீரவில்லை 
விழிகளில் ஈரம் காயவில்லை 

தமிழ் தாய் நிமிர 
தாயகம் விடிய 
நம் இனம் தலைக்க
நாம் கேட்பதில் தவறா 
உலகமே பார்க்க 
உயிர்களை கொண்டவன் 
உண்மையே செத்த பின் 
பிணம் பேசும் மனிதம்

இன்னும் 
விடுதலை தாகம் தீரவில்லை 
விழிகளில் ஈரம் காயவில்லை 

நஞ்சுள்ளம்  கொண்டவனே 
நச்சு புகை கொண்டு 
களம் ஆடி வெல்லாது 
கொன்றழித்த கோழையடா
அதர்மம் வென்றால் 
நிலைப்பதில்லை  வெறியனே
தர்மம் தலை தூக்கும் 
தாயகம் முடிவாகும் 

இன்னும் 
ஏன் கண்களில் ஈரம் தோழா !!
விடியும் ஈழம் விடி வெள்ளி காண்போம்!!

BY Heartbeat_santh


Wednesday, 20 November 2013

காதல் முன் கடவுள் பின்

பிடித்தவரை நேசிக்க ஒரு ஆயுள் போதாது 
நேசித்த ஒருவரை வெறுக்க நிமிடம் போதும் 
நேசித்தல் நேசிக்க படுதல் இலகுவில் கிட்டாது 
இலகுவில் கிடைத்தால் இறுதிவரை வராது 
கலைதயாத காதல் இருந்தால் நகராது நிமிடம்
பொறாமையின் அர்த்தம் கடவுளுக்கும் புரியும் 
By Heartbeat_Santh

Tuesday, 19 November 2013

தூக்கிலிடப்பட்ட நீதி

வாக்கெடுப்பில் நீதிகள் வழங்கி 
உயிர் போனதற்காய் நீதி கேட்டால்
ஒரு உயிர் போதாதாம் 
ஒரு இனமே சாகனுமாம்
சுட்ட பின் வரும் சுட சுட செய்தி 
இணையத்தில் இரங்கல் தெரிவித்தோம் 
இது தான் மனித நேய நவீன அவதாரம் 

By Heartbeat_santh




Wednesday, 13 November 2013

அன்பு அநாதயானால்

அன்பு அநாதயானால்

சிறு ஒளி இருந்தால் கூட 
இரு விழிகள் வழி  காட்ட 
இருள் கூட தடை இல்லை
அணைக்க முடியா அன்பு போல..!!  
  
ஆயிரம் சூரியன் இருந்தும் 
விழிகள் இல்லை எனில் 
விழிகள் விடியல் காணாது  
அநாதை பகிரா அன்பு போல..!!

By HeartBeat_Santh

Sunday, 10 November 2013

இருளில் பூக்கின்ற பூ

கருத்துக்கள் பகிரப்படா
கலைஞ்சனின் படைப்புகள் 
பேச முடிந்தும் ஊமை போல
சரி பிழை அறியா 
கலைஞ்சனின் ஆக்கங்கள் 
உயிருடன் எரிப்பதற்கு சமம்

By HeartBeat_santh


Saturday, 9 November 2013

காதலில்

காதலில் 
பிடித்தவருடன் இருக்கும் நிமிடங்களில்  
மவுனங்கள் கூட அழகாய் பேசும்..
இணைந்திருக்கும் தருணங்கள் நிஜமானவை
உண்மை அன்பு மட்டும் அரவணைக்கும் ...
காதல் இல்லாத வாழ்கையின் அனுபவம் 
கடவுளே உன் முன் வாந்தால் கூட பிடிக்காது ...

By HeartBeat_santh


Friday, 8 November 2013

தாயும் இசையும்

நல்ல இசையும் தாயும் ஒன்றே 
வெறுக்கவோ பிரிக்கவோ முடியாது 
தாயுடன் இருக்கும் சந்தோசத்தை 
நல் இசை கூட தருவதால் தான் 
இசை உள்ளவரை அநாதை இல்லை 
மொழி இல்லாமலே உணர்வுகள் பேசும் 

By HeartBeat_Santh



Thursday, 7 November 2013

விடியலுக்காய்

கதிரவன் ஒளி பட்டு சிரிக்காத உயிர் இல்லை 
இருந்தும் என்னை சுற்றி ஏன் ஒளி இல்லை 
காலை முதல் மாலை வரை காத்திருந்தும் 
என் முகத்தில் மட்டும் புன்னகை பூக்கவில்லை 
என்ன தான் சூரிய ஒளி பட்டாலும் 
பாலைவனம் என்றுமே பூப்பதில்லை 

By HeartBeat_santh


கமல்ஹாசன்

யார் யார் சிவம் 
அன்பே சிவம் 

நிஜவாழ்கையில் பல முகம் காட்டும் மனிதர்க்குள் 
திரை வாழ்கையில் மட்டும் பல முகம் காட்டி 
நிஜ வாழ்கையில் ஒரு முகம் கொண்ட 
திரையில் நடித்து நிஜத்தில் நடிக்காத 
சிறந்த நடிகன் நிஜமான மனிதர் 

இதயம் கவர்ந்த கமல்ஹாசன் அவர்களிற்கு 
இதய துடிப்பின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 
கமல்ஹாசன் ஆயுள் கலையின் ஆயுள் ஆகட்டும் 

Wednesday, 6 November 2013

மாற்றம்

கல் நெஞ்சம் படைத்தவர் 
என்ற காலம் கடந்து 
மனிதன் உணர்வற்ற 
கல்லாகவே மாறிவிட்டான் 
அடித்தாலும் வலிக்கவில்லை 
அனைத்தாலும் சுகமில்லை 

By HeartBeat_santh

கற்பனா சக்தி

கற்பனா சக்தி இல்லாத மனிதன் 
பணம் இருந்தும் ஏழை 
கற்பணை தரும் சுகத்தை 
காசு பணம் தர இயலாது
நூல்கள் வாசிக்கும் போது
இருந்த இடத்தில் இருந்தே 
உலகை சுற்றிவரும் அனுபவம் அது 

By HeartBeat_Santh

Tuesday, 5 November 2013

காதல் மழை

வான் தூறல் போடாமலே 
வானவில் தெரிகிறது 
நான்கு கண்கள் மோதி 
இமை துடிக்கும் நேரத்தில் 
இதயங்கள் இடம் மற்றம் 
மனதுக்குள் மழைத்தூறல் 

By HeartBeat_Santh

மனப் போரட்டம்

இறக்க போகிறோம் என தெரிந்தும் 
இறக்கும் போகும் நாள் தெரியமால்  
தினம் தினம் நாட்களை நகர்த்தும் 
மனப் போரட்டம் போல் தான் 
வெறுக்கபடுகிறோம் என தெரிந்தும் 
ஏன் என்று காரணம் தெரியமால் இருப்பது 
By HeartBeat_santh

Monday, 4 November 2013

விழி மொழி

விழி மொழி 

நம்மில் உண்மை மொழி பேசும் 
ஒரே வழி நம் கண்கள் வழி மட்டுமே 
இதயம் சொல்லவதை உதடுகள் மாற்றலாம் 
விழிகள் படம் போட்டு காட்டும் உண்மை 
உலகை மட்டும் அல்ல உள்ளங்களயும் காட்டும் 
மனித உள் உணர்வுகளை மெய்யாக சொல்லும் 

By HeartBeat_Santh


Monday, 14 October 2013

மகுடிக்கு மட்டும்  மயங்குவது  பாம்பு 
மனிதனது மயக்கமோ அனைத்திலும் 
ஊத்தினாலும் ஓதினாலும் போதை ஏறும் 
சுய அறிவு, மரியாதையை இழந்து இன்பம் 
தீய பழக்கங்கள் மட்டுமே போதை ஆகாது 
இன்பத்திற்கு அடிமை படுத்தும் அனைத்துமே 


Wednesday, 9 October 2013

மதி சொல்வதை கேட்டால் மனது தடுமாறும் 
மனது சொன்னபடி சென்றால் விதி விளையாடும்
மனதும் மதியும் சேர்ந்து முடிவு எடுப்பது கடினம்  
இரவும் பகலும்  ஒன்று  சேர துடித்தால்  முடியாது 
கெட்டதை படைத்தது விட்டு ஏன் தர்மம் வெல்லனும்  
தெய்வ படைப்பின் விடை அறிய முடியா கேள்விகள் 

Thursday, 12 September 2013

என்றென்றும் காதலுடன்

என்றென்றும்  காதலுடன் 

அன்பில் தொடங்கி அறிவால் ஆராயாது 
அன்பில் தொடங்கி அன்பில் முடியனும்

உண்மை காதல் விட்டு போவது இல்லை 
அது விட்டு கொடுத்து இணைந்து வாழும் 

நடந்த தவறு கொடுத்த மன்னிப்பு மறந்திடு 

இல்லையேல் தவறு நினைவில் இருக்கும் 

Friday, 6 September 2013

உலக அதியங்களே பார்த்து வியக்கும் 
உயிர்  உள்ள அதிசயம் ஏழையின் சிரிப்பு 


Thursday, 29 August 2013

காலத்தின் மாற்றத்தின் உச்ச கட்ட தீண்டாமை
துஷ்டனை கண்டால் தூர விலகி நின்றது போய்
நல்லவரை கண்டால் எட்டியே வைக்கிற காலம் 
ஏமாற்ற தெரிந்தவன் உலகம் பாராட்டும் அறிவாளி
பிழையாக வாழ்ந்தால் மட்டுமே சரி போடும் மாயம்

அநீதி முதலீடாம்  நீதி வியாபாரமாம் வேஷ உலகம்

Tuesday, 27 August 2013

தொலை தூர பயணத்துடன்
துணை நின்ற உறவுகள் பிரிகின்ற தருணம்
அழகிய ஒரு கனவு கலைந்தது போல வலி
நினைவுகள் வேகமாய் வந்து குவிய
நீருக்குள் மூழ்கி தத்தளிப்பது போல்

வாழ்கை கேள்வியாக கண்ணீர் பதிலானது

Friday, 16 August 2013

பிறக்கும் வரை சுமப்பது அன்னை
இறந்தாலும் சுமப்பது பூமி அன்னை
உனை மிதித்தும் மறந்தும் வாழ்கிறோம்
இருந்தும் காக்கிறாய் உலக அன்னையாவதால்
உன் மடியில் மண்டியிட்டு வணங்குகிறேன்

தாய் இல்லா எனக்கு புரிகிறது உன் அருமை 

Saturday, 3 August 2013

குருதியில் கலந்த உறவுகள் பிரிந்து சென்றாலும்
உறுதியுடன் உதித்த நட்பு தான் சேர்ந்து நிக்கிறது
உலகம் வேறு பாடு கடந்து கை கோர்த்து நடப்பது
இன மத மொழி கடந்த நட்பெனும் ஒரே பாதையில்
நட்பு மட்டும் இல்லை எனில் நாம் தனி தனி தேசமே
நட்பை படைத்த பெருமை எமக்கே இறைவனுக்கல்ல
அணைத்து நட்புள்ளங்களுக்கும்

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்



Friday, 26 July 2013

இருட்டில் கூட இமை திறந்து பார்த்தால் தான் 
இருள் வானில் நிலவும் நட்சத்திரமும் அழகு 
விடியும் வரை விழி மூடி ரசிப்பது காதலி அழகை 
அருகில் இருந்தாலும் சரி கனவில் வந்தாலும் சரி 


Monday, 22 July 2013

பேச்சில் வித்தை காட்டி  செயலில் ஊனமான
நம் கூட இருக்கும் மனிதர்கள் வெறும் பாரம்
நடு  தொண்டையில் சிக்கிய மீன் முள் போல்

துப்பினாலும் விழுங்கினாலும் வலி இருக்கும்

Sunday, 21 July 2013

பல சந்தர்பங்களில்
தெரிந்தோ தெரியமலோ
எமது வெற்றிகளிலும்  சந்தோசங்களிலும்
இன்னொருவர் தோற்கிறார், வேதனை அடைகிறார்
இங்கு யார் நல்லவர் யார்  கேட்டவர்

புரிந்தும் புரியாமலும் நகர்கிறது வாழ்க்கை


Thursday, 18 July 2013

குழந்தை எழுந்து நடந்த முதல் நிமிடம் 
பெற்றவருக்கு நம்பிக்கை பிள்ளை மீது 

முதன்  முதலில் காதல் சொன்ன நிமிடம் 
காதலரின் நம்பிக்கை பிரியாத வரம் என்று 

மனிதர் அறிந்த உண்மை புரிகின்ற நிமிடம் 
சுவாசித்த நம்பிக்கை இறுதி மூச்சோடு சரி 


Tuesday, 16 July 2013

ஆசை துறந்தால் சாமியாக முடியாது 
ஆசையை துறத்தல் என்பது உன் ஆசை 
யாதார்த்த வாழ்க்கை வாழ இயலாமால் 
ஒதுங்கி நின்று போதிப்பதல்ல போதனை
இயல்பாய் இணைந்து ஒன்றாய் பயணித்து 
அனுபவம் சொன்னால் ஆசை துறக்கலாம் 


Monday, 15 July 2013

மறு ஜென்மம் அதை நான் விரும்பவில்லை 
பிரிக்க முடியா  நம் காதலை அது பிரித்துவிடும் 
இறப்பு உடலுக்கு விடுதலை காதல் தொடரும் 
ஆசை துறந்த இறைவா காதலை பிரிக்காதே 


Sunday, 14 July 2013

பிறரில் சிறு முயற்சி கண்டாலும்
நம்பிக்கை கொடுக்க மறவாதீர்கள்
சிறு முயற்சி அகல் விளக்கு போல்
ஓராயிரம் விளக்குகள் ஓளி வீசலாம்

சிறு நம்பிக்கை சிகரம் தொடும் உயர்ச்சி


Saturday, 13 July 2013

உடலால் ஊனமானது கடவுள் எழுதிய தீர்ப்பு
மனம் ஊனமானால் நிச்சியம் விதி வெல்லும்
உணர்வுகள் உறுப்பானதால் விதி தோற்றது  
நீ மனதில் எழுதிய தீர்ப்பு உனது புதிய பாதை

Friday, 12 July 2013

அழுதழுது கண்களில் ஈரம் இல்லை 
இன்னும் இதயம் அழுகிறது நீ அறியாய் 
அன்பிற்காய் போராடுபவன் முட்டாள் 
நீ அன்பிற்காய் காத்திருக்கும் நாள் வரை 

Thursday, 11 July 2013

நம் நான்கு கரங்களால் நாம் இட்ட சிறையில் 
இதயங்கள் முத்தமிடும் இடைவெளிதான் 
நாணத்தால் நிலவு முகிலை தூது அழைத்து 
தன் முகம் மூடி இன்னும் இருளை கூட்டுகிறது 
நமக்கோ இந்த நொடி ஆயுள் முடிந்தாலும் ஆனந்தம் 
இறுதி வரை ஆயுள் கைதியானாலும் பேரின்பம் 


அளவு கடந்த அறிவும் 
ஆழமான கடவுள் பக்தியும் 
சில சமயங்களில் 
யதார்த்தமான வாழ்க்கையை 
ரசிக்க முடியாமால் 
தெளிவாக பேசி 
குழப்பத்தில் வாழ்வார்கள்! 


Tuesday, 9 July 2013

ஒற்றுமைகளை கண்டு காதல் பிறந்தாலும்
வேற்றுமைகளை மதித்தால் ஆயுள் வரை
புரியாத காதல் உடலால் இணைந்திருக்கும்
புரிந்த  காதல்  உணர்வால் தொடந்திருக்கும்